நம் நேரு/அத்தியாயம் 12

விக்கிமூலம் இலிருந்து

அத்தியாயம் 12.


இந்தியாவின் ஆட்சிப் பொறுப்பை காங்கிரஸ் ஏற்றுக் கொண்ட பிறகு, காங்கிரஸ் கட்சியில் கட்டுப்பாடு குலைந்து வந்தது. பதவிப் பித்தும், ஊழல்களும் பெருகிவந்தன. சில வருஷங்களுக்கு முன்பு காங்கிரஸைக் கலைத்துவிடுங்கள் என்று காந்திஜீ கூறிய வார்த்தைகள் தீர்க்க தரிசன உண்மை என்றே தோன்றியது. நாட்டில் மலிந்துள்ள இதர அரசியல் கட்சிகளின் பிரசாரத்தினாலும் காங்கிரஸின் பெயருக்கு மாசு ஏற்பட்டு வந்தது.

காங்சிரஸைக் காப்பாற்றி, அதற்கு மறுபடியும் பெருமை தரக்கூடியவர் ஜவஹர்லால் நேரு ஒருவர் தான் என்று கட்சியினர் உணர்ந்தார்கள். அதனால் 1958-ல் அவரையே தலைவராகத் தேர்ந்தேடுத்தார்கள். 1954ம் வருஷம் கல்கத்தா அருகிலுள்ள கல்யாணியில் கூடிய காங்கிரஸுக்கும் நேரு தான் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அங்கு அவர் நிகழ்த்திய தலைமைஉரையில் இந்தியப் பிரச்னைகள், உலக தொடர்பு பற்றிஎல்லாம் விரிவாக ஆராய்ந்தார். யுத்த பயங்கரம், சமாதானத்தின் அவசியம், இந்தியாவின் அயல் நாட்டுக் கொள்கை முதலியன பற்றியும் தெளிவு படுத்தினர்.

"ஜனநாயகத்தைப் பாதுகாப்பதாகச் சொல்லிக் கொண்டும், சுதந்திரத்தின் பெயராலும், வேண்டாத சூழ்நிலை ஒன்று உருவாகி வருகிறது. அது ஜனநாயகத்தின் மூச்சைப் பிடிக்கிறது; சுதந்திரத்தைத் திணறடிக்கிறது. முடிவில் அது இரண்டையுமே இல்லாமல் செய்துவிடும் என்றே தோன்றுகிறது. உலகத்தில் நாம் தான் தலைமை தாங்க வேண்டும் என்று நாம் உரிமை கொண்டாடவுமில்லை; ஆசைப்படவுமில்லை. இதர நாடுகளின் உரிமை யில் நாம் தலையிட விரும்பவில்லே. நமது உரிமைகளில் பிறர் குறுக்கிடுவதை நாம் ஆதரிக்கவும் முடியாது. உலக நாடுகளுக்கிடையே பலவித அபிப்பிராய பேதங்கள் இருங்தாலும் கூட பரஸ்பரம் சிநேகபாவமும் கூட்டுறவும் அவசியம் என நாம் நம்புகிறோம். நமது கொள்கைகளினாலோ, அல்லது நாம் கையாளத் துணிகிற சில நடை முறைகளினாலோ, உலகத்தில் நீடிக்கிற பெரும். பிரச்னைகளில் குறிப்பிடத்தகுந்த மாற்றங்களை விளைவித்துவிட முடியும் என்ற வீண் ஆசை நமக்குக் கிடையாது. ஆனால் சில வேளைகளிலாவது சாதகமான விளைவுகள் ஏற்படச் செய்து சமாதானம் நீடிக்க உதவிபுரிய முடியும், அதற்குச் சந்தர்ப்பம் ஏற்படும் பொழுது சகலவிதமான முயற்சிகளையும் செய்வதே கல்லது.”

நம் நாடு பலமும் வளமும் அடைவதற்கு இதர தேசங்களின் உதவியை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதில் பிரயோசனமில்லே; நமது நிலையை நாமே உயர்த்திக்கொள்ள வேண்டும் என்று அடிக்கடி நேரு வற்புறுத்தி வருகிறார். கல்யாணிக் காங்கிரளின்போதும் இதை எடுத்துச் சொன்னார் அவர்:

“தமது முயற்சிகளினால்தான் நமது வலிமையை நாம் பெருக்கிக் கொள்ள முடியுமே தவிர மற்றவர்களை நம்பியிருப்பதினால் அல்ல. தற்காப்பு, சுய தேவைப் பூர்த்தி ஆகியவைகளினால் நமது பலம் பெருகுவதுடன் இதர நாடுகள் நம்மிடம் கொள்ளும் மதிப்பும் அதிகரிக்கும். நமது நாடு நம்முடையதே என்ற நிலையும் நீடிக்கும்.
இதற்குப் பெருமுயற்சி தேவைதான். ஆள்பலம், பொருளாதார பலம் மாத்திரமல்ல; ஆன்மபலம் பெறுவதற்குரிய முயற்சியும் வேண்டும். அந்த விதமான முயற்சிதான் நமது நாட்டுச் சுதந்திரம் பெற்றுத் தந்தது. சுதந்திரம் கிடைத்த புதிதில் எதிர்ப்பட்ட இன்னல்களை வெற்றி பெறவும் அதுதான் துணைபுரிந்தது. அதுதான் தம் நாட்டினரின் உண்மையான பலம். நாம் விழிப்புடன் இருப்போம். நமது தேசத்தின் பூர்வீகமான கலாசாரத்தையும், நிலையான பண்பையும் பாதுகாப்போம். உலகில் சமாதானம் இடம் பெறுவதற்காக நாம் செய்கிற முயற்சிகளை விடாது வளர்ப்போம். இவற்றுக்கெல்லாம் ஆதாரமாக நம்மை நம்பியே நாம் வாழ்வோம்."
 

இந்நூல்

விற்பனை உரிமை

நேரு புத்தகசாலை

125, செட்டியார் தெரு

கொழும்பு

 

Jacket Printed at Vinodan Press, Madras-1

"https://ta.wikisource.org/w/index.php?title=நம்_நேரு/அத்தியாயம்_12&oldid=1377009" இலிருந்து மீள்விக்கப்பட்டது