நம் நேரு/அத்தியாயம் 5

விக்கிமூலம் இலிருந்து

அத்தியாயம் 5.


பல வருஷங்கள் வரை நேருவின் அரசியல் நடவடிக்கைகளில் பூர்ஷ்வாப் பண்பே ஓங்கியிருந்தது. தொழிலாளர்கள், விவசாயிகள் பிரச்னைகளைக் குறித்து அன்றைய அரசியல் தலைவர்கள் சிந்தித்ததே இல்லை. பத்திரிகைகளும் அந்த வர்க்கத்தினரைப் பற்றிய செய்திகளுக்குக் கூட இடமளித்ததில்லே.

1920-ம் வருஷம் வரை, பாக்டரிகளிலும் வயல்களிலும் உழைத்து வந்தவர்களின் வாழ்க்கைத்தரம் பற்றி நான் ஓர் சிறிதும் அறிந்ததில்லை. எனது அரசியல் போக்கு முழுக்கழுக்க பூர்ஷ்வாத்தன்மையே பெற்றிருந்தது. நாட்டிலே பயங்கரமான வறுமையும், துயரமும் நீடிக்கிறது என்பது மட்டுமே எனக்குத் தெரியும். அரசியல் உரிமை பெற்றுவிடுகிற சுதந்திர இந்தியாவின் முதல் கடமை நாட்டின் வறுமையை ஒழித்துக் கட்டுவதுதான் என்ற உணர்வு பெற்றிருந்தேன். சுதந்திரம் கிடைத்தவுடன் மத்தியதர வர்க்கத்தினர் சுபீட்சவாழ்வு பெறவேண்டும், அது தானகவே நேர்ந்துவிடும் என்று தோன்றியது. பீகார் மாகாணத்தில் உள்ள சம்பரானிலும் குஜராத்தில் உள்ள கெய்ராவிலும் காந்திஜீ நடத்திய விவசாயப் போராட்டங்களுக்கு அப்புறம்தான் நான் குடியானவர் பிரச்னைகளைக் கவனிக்கத் தொடங்கினேன்” என்று நேரு எழுதியுள்ளார்.

1920-ம் வருஷம் மே மாதம் ஜவஹரின் தாயாரும் மனைவி கமலாவும் உடல் நலக் குறைவு காரணமாக முசெளரியில் தங்கியிருக்க நேர்ந்தது. ஆப்கானய யுத்தத்துக்குப் பிறகு பிரிட்டிஷாருக்கும் ஆப்கானியருக்குமிடையே சமாதான ஒப்பந்தம் பற்றிய பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருந்த காலம் அது. ஆப்கானியப் பிரதிநிதிகள் முசெளரியில் முகாமிட்டிருந்தனர். அவர்களுடன் எவ்விதத் தொடர்பும் கொள்வதில்லை என நேரு உறுதிமொழி தர வேண்டும் என்று அரசினர் கோரினர். நேரு மறுத்தார் அதனால் அவர் முசெளரியை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என்று உத்திரவு பிறப்பிக்கப்பட்டது. நேரு டெஹ்ரா டன் ஜில்லாவிலிருந்து நீங்கி அலகாபாத்தில் இரண்டு வார காலம் தங்கியிருந்தார். இடைக்காலத்தில் ஆட்சியினரும் தங்கள் மனதை மாற்றி உத்திரவை வாபஸ் பெற்று விட்டனர்.



அந்த இரண்டு வாரத்திலும் நேருவுக்கு வேறு அலுவல்கள் இல்லேயாகையால், அவர் கிஸான் இயக்கத்தில் ஆர்வம் காட்டுவதற்குரிய வாய்ப்புக் கிட்டியது.

அலகாபாத்திலுள்ள பிரபல அரசியல்வாதிகளின் கவனத்தைக் கவர்ந்து, தங்கள் குறைகளை அவர்களிடம் முறையிட்டு ஆதரவு பெறும் நோக்கத்தோடு, சுமார் இருநூறு குடியானவர்கள் பர்தாப்கர் ஜில்லாவைச் சேர்ந்த ஊர்களிலிருந்து கிளம்பி ஐம்பது மைல் தூரம் நடந்து நகரை வந்தடைந்தார்கள். ராமச்சந்திரன் என்பவர் தலைமை தாங்கி தனிப்பட்ட முறையில், அரசியல் தலைவர்களின் தொடர்போ ஆதரவோ இல்லாமல், கிஸான் இயக்கத்தைக் கொஞ்ச காலம் நடத்தி வந்தார்.

அலகாபாத்துக்கு நடந்து வந்த விவசாயிகளை நேரு சக்தித்து அவர்கள் துயரங்களைப் பற்றி விசாரித்தார். அவர்களுடைய வேண்டுகோளுக்கு இணங்கி, நேருவும் கிராமங்களுக்கு விஜயம் செய்தனர், ரயில்வேத் தொடர்போ, ரஸ்தாப் போக்கு வரத்தோ இல்லாத பல இடங்களிலும் அலைந்து திரிந்து மக்களின் அன்றாட வாழ்க்கையையும் அவதிகளையும் கண்ணாறக் கண்டார்கள். குடியானவர்களின் ஆர்வமும் துடிப்பும் நேருவுக்கு ஊக்கமளித்தன. ஊர் தோறும் திரள் திரளாக மக்கள் கூடினர். அன்பைச் சொரிந்தனர். நம்பிக்கையோடு தலைவர்கள் முகத்தையே பார்த்து அவர்கள் சொற்களைக் கேட்டு, நன்றியும் காட்டினர்.

கிராமவாசிகளின் துயர வாழ்வும், அவர்கள் காட்டிய அன்பு உணர்வும் நேருவின் உள்ளத்தில் ஆழமாகப்பதிந்தன. தனது நிலைக்காக வெட்கினார் அவர். அவருக்குத் தன் மீதே பரிதாபம் ஏற்பட்டது. நாட்டிலே ஆயிரமாயிரம் மக்கள் சகிக்கவொண்ணாத நிலையில் அவதியுற்று வாழும்போது, தான் ஆடம்பர வாழ்வு வாழ்ந்து கொண்டு, அரசியல் என்ற பெயரால் மேலோட்டமான காரியங்களைக் கவனிப்பதோடு நின்று விட்டதை நினைத்து அவர் வெட்கமும் துக்கமும் கொண்டார். இந்தியாவின் அரைநிர்வான மக்களும், அரைப்பட்டினி ஜனசமுதாயமும் அவர் கண்முன்னே இதுவரை அவர் காணத்தவறிவிட்ட புதியதோர் சித்திரமாக விஸ்வரூபம் எடுத்து நின்றனர். உடையற்று, உணவற்று உரிமையற்று நசுக்குண்டு அவல வாழ்வு வாழும் இந்தியாவைக் கண்டுபிடித்து விட்டார் நேரு. சும்மா பார்த்துப் போக வந்த அவரிடம் மக்கள் கொண்டு விட்டநம்பிக்கை நேருவின் உள்ளத்திலே புதிய உணர்வைத் தூண்டியது. அதுவே அச்சத்தைக் கொடுத்தது.

பலருடன் பேசி பலரது முறையீடுகளையும் கேட்டு, கிராமவாசிகளின் உண்மை நிலைமையையும், அவர்களைச் சுரண்டிக் கொழுக்கின்ற மனிதக் கழுகுகளின் தன்மைகளையும் இனங்களையும் பற்றி விரிவாக அறிந்து கொண்டார். மூன்று நாட்கள் கிராமங்களில் தங்கிவிட்டு அலகாபாத் திரும்பிய நேரு, மீண்டும் கிராம யாத்திரையைத் தொடர்ந்தார். அவர் மற்றும் சிலருடன் கிராமம் கிராமமாகச் சென்று, மண் குடிசைகளில் தங்கி, குடியானவர்களோடு உண்டு உறங்கி, மணிக் கணக்கிலே பேசி, பெரிதும் சிறிதுமான பொதுக் கூட்டங்களில் சொற்பொழிவாற்றி, மக்களின் நம்பிக்கையை வளர்த்தார்.

சிறிய கார் ஒன்றிலே தான் அவர்கள் சுற்றினர்கள். சரியான ரஸ்தாக்கள் இல்லாத இடங்களிலே குடியானவர்களோடு இரவோடு இரவாக, தற்காலிகமான பாட்டைகளை அமைத்தார்கள். அடிக்கடி கார் மண்ணில் பதிந்துவிடும். அப்போதெல்லாம் கிராமவாசிகள் உற்சாகமாகத் தோள் கொடுத்துக் காரைத் தூக்கி முன்னால் கொண்டு போய் விட்டு விடுவார்கள். நேருவின் கோஷ்டி சென்ற இடங்களுக்கெல்லாம் நிழல் போல் போலீஸாரும் தொடர்ந்தனர். தலைவர்களின் வேகமும் ஓயாத சுற்றுப் பிரயாணமும் போலீஸின் திறமையைப் பரீட்ஷிக்கும் பெரிய சோதனைகளாகந்தான் விளங்கின.

அது கடுங்கோடைப் பருவம். வெயில் சுட்டெரித்தது. கண்களைக் கூசச் செய்தது. வெயிலில் வெளி இடங்களில் சுற்றிப் பழகியவர் அல்லர் நேரு. இங்கிலாந்திலிருந்து திரும்பி வந்த பிறகு ஒவ்வொரு கோடை காலத்தையும் சுகவாச ஸ்தலங்களிலேயே அவர் கழித்து வந்தார். இப்போதோ உணர்ச்சிப் பெருக்கோடு அவர் தலைவிலே தொப்பிகூட இல்லாமல், சாதாரணத் துண்டைச் சுற்றிக் கொண்டு, திறந்த வெளிகளிலே, எரிக்கும் சூரிய உஷ்ணத்தை ஏற்றுக் கொண்டு திரிந்தார். சூடோ குளிரோ தன் உடல் எவ்வகையிலும் பாதிக்கவில்லை என உணர்ந்து பெருமிதம் அடைந்தார்.

நேருவிடம் இயல்பாகக் குடிகொண்டிருந்த கூச்சத்தைக் குடியானவர்கள் போக்கடித்து விட்டார்கள். பொதுக் கூட்டங்களில் பேசுவதற்குப் பயிற்சி அளித்தவர்கள் அவர்கள் தான். நேரு, அவர்களிடம் பேசாமல் தீராது. பேசியே ஆக வேண்டிய நெருக்கடிகள் ஏற்படவும் அவர் ஹிந்துஸ்தானியில் தான் தனது எண்ணங்களை அவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியிருந்தது. மேடைப் பிரசங்க பாணிகள் எல்லாம் அவர்களுக்குத் தேவையுமில்லே; புரியவும் புரியா. ஆகவே மனிதனுக்கு மனிதன் பரஸ்பரம் மனம் விட்டுப் பேசுவதுபோல, நேரு அவர்கள் மத்தியிலே தன் உள்ளத்தில் தோன்றிய எண்ணங்களை எடுத்துச் சொன்னார். நல்ல பேச்சாளராக வளர்ந்துவிட்டார்.

பிறகு அடிக்கடி நேரு கிராமப் புறங்களிலே பணிபுரிவதில் ஆர்வம் காட்டினர். காங்கிரஸ் தொண்டர்களும் தங்கள் லட்சிய கோஷங்களை கிராமங்கள் தோறும் ஒலிக்கச் செய்தார்கள். விவசாயிகளும் உரிமைக் கிளர்ச்சிகளில் தீவிரமாகப் பங்கெடுத்துக் கொண்டார்கள். அஹிம்சை என்கிற லட்சியத்தை மறந்து விட்டு அவர்கள் அவ்வப்போது பலாத்கார முறைகளில் ஈடுபட்டு விடுவதும், அதன் விளைவுகளை அனுபவித்தும் சகஜமாகிவிட்டது.

கால ஓட்டத்திலே சம்பவங்கள் வேகமாகத் தோன்றத் தொடங்கின. அரசியல் போராட்டம் வலுப்பெற்று வளர்ந்தது. காந்திஜீ ‘ஒத்துழையாமை’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார். மோதிலால் நேரு தமது தொழிலை உதறிவிட்டு எளிமை வாழ்வை ஏற்பது பற்றித் தீவிரமாகச் சிந்தித்துவந்தார். ஐரோப்பிய உடை நாகரிகம் காங்கிரஸ் வட்டாரத்திலே செல்வாக்கு இழந்து, கதராடை மேன்மையுறத் தொடங்கியது. காங்கிரஸின் கொள்கைகளும் அரசியல் நோக்கமும் புதிய கதியில் திரும்பின. அபிப்பிராய பேதம் கொண்ட தலைவர்கள் பலர் விலகிநின்றனர். மத்தியதரவர்க்கத்தினரிலும் அடிப்படியில் நின்றவர்களே பெரும்பாலும் காங்கிரஸில் சேர்ந்தார்கள். காங்ரஸின் ஒற்றுமையும் கட்டுப்பாடும் ஆத்மபலம் பெருகி வந்தன.


அதற்கு நேர்மாறாக அரசினரின் பண்பு வளர்ந்தது. நீதி, தர்மம் முதலியவைகளைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. தலைவர்களின் பண்பையோ, நாட்டு மக்களின் போக்கையோ, அவர்களது செயல்களின் பலா பலன்களைப் பற்றியோ சர்க்கார் சரியாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆங்கிலேயரின் உள்ளத்தில் குழப்பமும் கலவரமுமே கூத்திட்டன. பிரிட்டிஷ் ஆட்சி மீது மக்களுக்குப் பூரணமான வெறுப்பு ஏற்பட்டு விட்டது.


எங்கும் கிளர்ச்சிகளும், போராட்டங்களும் தலைதூக்கவே, சிறைச்சாலைகள் நிரம்பத் தொடங்கின. தலைவர்களும் தொண்டர்களும் சாதாரண ஜனங்களும் ஜெயிலில் தள்ளப்பட்டார்கள். மக்களின் குழம்பிய சிந்தனைகள் ஆசைகள் ஆகியவற்றுக்குத் தெளிவான உருவம் தரும் சின்னமாக” விளங்கினர் காந்திஜீ.


ஜவஹர்லால் நேருவின் ஊக்கம், உற்சாகம், உழைப்பு முதலியவற்றுக்கு ஒரு அளவே இருந்ததில்லை. நாட்டைக் குலுக்கிய இயக்கத்தோடு இயக்கமாக ஒன்றி விட்டார் அவர். புத்தகங்கள், நண்பர்கள், உறவுத் தொடர்புகள் எல்லாவற்றையும் மறந்து விட்டார் நேரு, மனைவி, மகள், குடும்ப விவகாரங்கள்-யாரும் எதுவும் அவர் சிந்தையில் படிந்து நிற்கவில்லை அக்காலத்தில், ஆபீஸ்களிலும், கமிட்டிகளிலும், பொதுக்கூட்டங்களிலும், கிராமங்களிலும் தான் வாழ்ந்தார் அவர். நேருவுக்கு ஜனங்களைப் பிடித்துப் போயிற்று. ஜனங்களுக்கு நேருவிடம் விசேஷமான பற்றுதல் ஏற்பட்டுவிட்டது.

1921-ம் வருஷ ஆரம்பத்தில் தனிப்பட்ட தலைவர்களை மட்டும் தான் கைது செய்து கொண்டிருந்தது அரசாங்கம், ஆனால் ஆண்டு இறுதியில் இந்தியாவுக்கு வேல்ஸ் இளவரசர் விஜயம் செய்வதாகத் திட்டம். அவருக்கு வரவேற்பு அளிக்கும் எல்லா விழாக்களையும் பகிஷ்கரிக்க உத்திரவிட்டது காங்கிரஸ். "இந்தியா பூராவுமே ஒரு பெரிய சிறைச்சாலைதான். அடிமை விலங்கைத் தகர்த்தெறிய வேண்டியது காங்கிரளின் வேலே" என்று கர்ஜித்தார் தலைவர் ஸி. ஆர். தாஸ். காங்கிரஸின் சவாலே ஏற்பது போல் சர்க்கார் காரியங்கள் செய்தது. கும்பல் கும்பலாக ஆட்களை ஜெயிலுக்குள் தள்ளியது! 1921 டிசம்பர். 1923 ஜனவரி ஆகிய இரண்டு மாதங்களில் மட்டும் சுமார் முப்பதினாயிரம் பேர் சிறையில் தள்ளப்பட்டதாகக் கணக்கிடப் பட்டிருக்கிறது.

1921 -டிசம்பரில் தான் ஜவஹர்லால் நேரு முதன் முதலாக சிறை அனுபவம் பெற்றார். தலைவர்களும் ஜனங்களும் ஜெயிலில் அடைபட்டுக் கிடந்தபோதும், காந்திஜீயைக் கைது செய்யத் துணியவில்லே அரசாங்கம். அவரைக் கைது செய்தால் நாட்டில் பெருங்குழப்பம் ஏற்பட்டுவிடுமே என்ற பயம்தான் காரணம்.

காந்திஜி வழிகாட்டித் திட்டங்களிட்டு ஒத்துழையாமை இயக்கத்தை நடத்தி வந்து போது, 1922 பிப்ரவரியில் செளரி செளரா எனும் இடத்தில் சிலர் பலாத்கார முறை களைக் கையண்டுவிட்டார். இதைக் காரணமாகக் காட்டி, காந்திஜீ திடிரென்று போரட்டத்தை நிறுத்திவிட்டார்.


இச்செய்தி எல்லோருக்குமே அதிர்ச்சி கொடுத்தது. தலைவர்கள் கோபம் கொண்டனர். நேருவுக்கு காந்திஜீ மீது கோபமும், அவர் கொள்கைகளில் பெருந் தவறு இருக்கிறது.


அரசாங்கம் நிம்மதியடைந்தது. ஒரு சிலவாரங்களிலே காந்திஜீயைக் கைது செய்து நீண்ட காலச் சிறைத் தண்டனை அளித்து மகிழ்ந்தது.

அக்காலத்தில் தான் மோதிலால் நேருவும் சிறைவாச அனுபவம் பெற நேர்ந்தது. தந்தைக்கும் மகனுக்கும் ஆறுமாத சிறைவாசம் விதிக்கப்பட்டது.

ஆனால், மூன்று மாதம் முடிந்ததும் ஜவஹர் விடுதலை செய்ப்பட்டார். அலகாபாத்திற்குத் திரும்பிய நேரு காங்கிர ஸ்தாபனம் சரியாகச் செயல் புரியாமல் தூங்கி வழிந்ததைக் கண்டு வருந்தினார். தான் தீவிரமாக ஏதாவது செயல் புரிய வேண்டும் எனத் துணிந்து. சுதேசித் துணி பகிஷ்காரத்தில் ஈடுபட்டார். ஆறு வாரங்களுக்குள் அரசாங்கம். அவரை மறுபடியும் கைது செய்து சிறைத் தண்டனை கொடுத்து விட்டது.


நேரு லஷ்மணபுரி ஜில்லாச் சிறையில் அடைக்கப் பட்டிருந்தார்.


1923 ஜனவரியில் அரசாங்கம் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்த போது நேருவும் வெளியே வந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நம்_நேரு/அத்தியாயம்_5&oldid=1376999" இலிருந்து மீள்விக்கப்பட்டது