உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை-2/240

விக்கிமூலம் இலிருந்து

240. கணிச்சியிற் குழித்த கூவல்!

பாடியவர் : நப்பாலத்தனார்.
திணை : பாலை.
துறை : (1) பிரிவிடை மெலிந்த தலைமகள் சொல்லியது; (2) நெஞ்சினால் பொருள் வலிக்கப்பட்டு ஆற்றானாகிய தலைமகன் சொல்லியதூஉம் ஆம்.

[(து.வி.) (1) பிரிவுத் துயரின் வெம்மைக்கு ஆற்றாளாகிய தலைவி, தலைவன் கடந்து செல்லும் வழியின் வெம்மையையும் நினைத்தவளாக, அவன் வன்னெஞ்சைக் குறித்துப் புலம்புவதாக அமைந்த செய்யுள் இது. (2) பொருளின்பால் தன் உள்ளம் பெரிதும் செல்லலைக் கண்டு, தலைவியைப் பிரியவும் மனமற்ற தன்மையையும் நினைந்து, இருபாலும் ஊசலாடிய உள்ளத்தானாகிய ஒரு தலைவன் சொல்வதாக அமைந்த செய்யுள் இது.]

ஐதே கம்மவிவ் வுலகுபடைத் தோனே, வையேர் வாலெயிற்று ஒண்ணுதற் குறுமகள்! கைகவர் முயக்கம் மெய்யுறத் திருகி ஏங்குயிர்ப் பட்ட வீங்குமுலை யாகம் துயிலிடைப் படூஉம் தன்மைய தாயினும் 5 வெயில்வெய் துற்ற பரலவல் ஒதுக்கில் கணிச்சியிற் குழித்த கூவல் நண்ணி கமானது மெய்யோடு மெய்ப்பொருந்தக் கிடப்பது. அதனிடைச் சிறுபொழுது தழுவலை நீக்கி அவர் சற்றே ஒதுங்கிப் படுப்பார். அதற்கே பொறாமல், ஏங்குகின்ற சுடுமூச்சோடு விளங்கும், பருத்த கொங்கைகளைக் கொண்டதான என் மார்பகம்! அதுதான், அவரையின்றித் தனித்துக் கிடந்து துயில்கின் ஆன்வழிப் படுநர் தோண்டிய பத்தல் யானை இனநிரை வௌவும் கானந் திண்ணிய மலைபோன் றிசினே! 10 தெளிவுரை : கூர்மையோடே அழகும் ஒளியும் அமைந்த பற்களையும், ஒளிகொண்ட நெற்றியையும் உடையவளான இளமகளே! கைகளாலே அணைத்தபடியே முயங்கிக் கிடப்போம். அம்முயக்றதான கொடுமையையும் பொறுக்குமோ! அதுதான் அத்தன்மைப்பட வருந்துவதாயினும், வெயிலின் வெம்மையாலே கொதிப்புற்ற பரற்கற்களையுடைய பள்ளங்களிலே, ஒருபக்கமாகக் கணிச்சியாலே குழிதோண்டிக் கிணறாக்கியுள்ள இடத்தைப், பசுநிறைமேய்க்கும் ஆயர்கள் சென்று அடைவர். அதனிடத்தே நீரைக் காணாராகி, மேலும் பள்ளந் தோண்டி, அதனிடத்தே ஊறிவரும் நீரைக் குடித்தும் ஆனிரைக்கு ஊட்டியும் விடாய் தீர்ப்பர். அத்தகைய பத்தலையும், எங்கும் நீரைக் காணாதவான யானைக்கூட்டங்கள் வரிசையாகச் சென்று கவர்ந்து கொள்ளும். கானத்தின் தன்மையும் அது விளங்கும். மலையிடத்திலுள்ள திண்ணிய மலையைப்போல நிலையான தன்மையாக ருக்கின்றது என்பர். அதுதான் எனக்கு அச்சத்தைத் தருகின்றது. நம் தலைவர் செல்லும் வழியை அப்படிக் கொடுவெம்மையோடும் படைத்த கொடியவன், தானும் அதனிடத்தே பையச்சென்று துன்புற்று நலிவானாக!

சொற்பொருள் : ஐதுஏகு–பையச் செல்லுக. கைகவர் முயக்கம்–இருவர் கைகளும் மாறிப் பிறர் உடலைத் தழுவிய படி கிடக்கின்ற முயக்கம். திருகி–மாறுபட்டு; புரண்டு படுத்து என்க. பரல்–பரற்கற்கள். அவல்–பள்ளம். கணிச்சி–குந்தாலி; பாறைப் பகுதியை உடைக்கும் வலிய இருப்பாயுதம். கூவல்–குழி. பத்தல்–அதிற்செய்த பள்ளம்; பட்டையால் முகந்து கொள்ளற்கு ஏற்றபடி தோண்டப்படுதலின் 'பத்தல்' என்றனர். பள்ளத்தே நீர் இருக்கலாம்; அஃதின்றி வறண்டது; அதன்பால் குந்தாலியால் குழித்துக் கிணறு போலத் தோண்டியிருந்தனர்; அதுவும் வறண்டது; அதன் நடுவில் மீளவும் தோண்டி, அதன்கண் எழுந்த சிறு ஊறலை ஆயர் உண்டனர்; அவர் தோண்டிய அப்பத்தல் தானும் இதுபோது யானை இனநிரைகளால் கவரப்பட்டன. அதுவும் இனி இல்லை என்பதாம்.

விளக்கம் : என்னாலே துய்த்து இன்புறுவதற்கு ஏதுவாகிய அவரது மெய்தானும், நீரற்ற அந்த நெடுவழியிலே வாடி நலனிழந்து போவதுபோலும் என்று வேதனைப்படுகின்ற தலைவியானவள், இந்த உலகத்தைப் படைத்தவன் அந்த வழியிடை மெல்லமெல்லச் சென்று தானும் அந்தத் துயரை அநுபவிப்பானாக என்று சபிக்கின்றாள். அவளது பிரிவுப் பெருந்துயரத்தின் வெம்மை இதனாலே நன்கு விளங்கும். கோவலர் இவ்வாறு பத்தல் தோண்டுவது வழக்கம் என்பதனை, 'பயநிரை சேர்ந்த பாழ்நாட்டாங்கண், நெடுகளிக் கோவலர் கூவற்றோண்டிய, கொடுவாய்ப் பத்தல் வார்ந்து சிறுகுழி' எனவரும் அகநானூற்றுச் செய்யுட்பகுதியாலும் அறியலாம் (அகம் 155). 'கானம்' திண்ணிய மலைபோன்றிசினே' என்பதற்கு, 'முல்லை நிலத்ததாகிய அப்பாலை தானும் மலைபோலத் திண்மைபெற்றுப் போயிற்று' எனவும், யானை இன நிரை வந்து வௌவுதலால் அது குன்றுகளையுடைய மலைப்பகுதி போலத் தோன்றலுறும்' எனவும் கொள்ளலாம்.

இறைச்சி : 'ஆனிரை உண்பிக்க வேண்டிக் கோவலர் கூவலருகே பறித்த பத்தலிலே நிரம்பியிருந்த நீரையும் யானையினம் கவர்ந்து உண்ணா நிற்கும்' என்றனள். அவ்வாறே தலைவனாலே துய்த்தற்கு உரியதான என் நலனையும் பசலையானது கவர்ந்துண்ணும் என்றனளாம்.

மெய்ப்பாடு, அழுகை; பயன், அயாவுயிர்த்தல். இனி, இரண்டாவதாகக் கூறப்பட்ட, 'நெஞ்சினால் பொருள் வலிக்கப்பட்டு ஆற்றானாகிய தலைமகன் சொல்லியது' என்னும் துறைக்கு ஏற்பப்பின்வருமாறு பொருத்திப் பொருள் கொள்ளல் வேண்டும்.

"நெஞ்சமே! இக்குறுமகளை முயங்கித் துய்த்துப் பெறுகின்றதான இன்பத்தினை வேண்டாவென வெறுத்து நீக்குதலாலே, இவள்தான் துயிலைப் பெறாதாளாக வருந்தித் துன்புற்று நலிவாளாயிலும், யான் செல்லுதற்குரிய கானமோ வெம்மை மிக்கதாய், மலைபோலும் பேரச்சத்தைத் தருகின்றதே! அதனைப் படைத்தவன், தானும் மெத்தென அதனிடைச் சென்று நலிவானாக" என்று தலைமகன் கூறியதாக உரைத்துக் கொள்ளல் வேண்டும்.

'யான் துய்த்தற்குரிய அவளது எழில் நலத்தினை அப்போது பசலையானது உண்டு ஒழித்துவிடும்' என்று சொன்னதாக, இறைச்சிப் பொருளும் அதற்கேற்பக் கொள்க.

இதன் பயன், தலைவன் பிரிவைக் கைவிட்டு இல்லத்திலேயே தங்கிவிடுபவன் ஆவான் என்பதாம்; இதனால் அவள் மனத்துயரம் அகலும் என்பதும் கொள்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/240&oldid=1698405" இலிருந்து மீள்விக்கப்பட்டது