பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/107

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தோழியிற் கூட்ட மரபுகள் 89 கரையிலே நிற்றலன்றிப் பொழிலில் புகும் வேலை தனக்கு இல்லை என்பதையும் அறிவிக்கின்றாள். தோழியின் முடியும் இடனுமா ருண்டே ‘’ என்னும் விதிபற்றித் தோழி குறியிடங் கூறினாள் என்பது அறியத் தக்கது. இறையனார் களவியலாசிரியர், பகற்குறிதானே இகப்பினும் வரையார்' என்று பகற்குறி கூறுவர். அஃதாவது, பகற்குறி பல இடங்களில் அமையும் என்பது கருத்து. அதன் உரையாசிரியரும். 'இகத்தல் என்பது ஒன்றின் இறத்தல்...பலவாதல் என்றவாறு. ஒருஞான்று வேங்கைப் பொதும்பினுள் ஆம்; ஒருஞான்று கோங்கம் பொதும்பினுள் ஆம், குறிஞ்சி நிலமாயின். ஒருஞான்று புன்னைறம் கானலுள் ஆம்; ஒருஞான்று கைதை (தாழை)யங் கானலுள் ஆம், நெய்தல் நிலமாயின். இவ்வகை ஏனை நிலத் திற்கும் ஒக்குமாறு அறிந்து உரைக்க. பகற்குறிப் புணர்வுகள் பலவாகும்மே என்றாராகலின் என்று விளக்குவர். சங்க இலக்கியங்களிலும் கோவை இலக்கியங்களிலும் பயின்று வரும் பகற்குறிபற்றி வரும் பாடல்களைச் சுவைத்து மகிழ்க பகற்குறியின் பொழுது ஒரு தலைவி படும் துன்பத்தை அக நானுாறு மிக அழகாகப் பேசுகின்றது. கடும்பரிக் குதிரை ஆஅய் எயினன் நெடுந்தேர் மிஞலியொடு பொருதுகளம் பட்டெனக் காணிய செல்லாக் கூகை நாணிக் கடும்பகல் வழங்கா தாஅங்கு இடும்பை பெரிதால் அம்ம இவட்கே..”* (கடும்பரி-கடிய செலவினையுடைய எயினன்-ஒர் அரசன்; களம் பட்டென-களத்தில் இறந்தனனாக கூகை-கோட் டான் (பகற்குருடு உடையது இது); நாணி-நாணுதலுற்று: வழங்காதாங்கு-இயங்காதவாறுபோல;இடும்பை-துன்பம் l ஆய் எயினன் என்பான் புட்களுக்குப் பாது காவலனாக இருந்தான் என்பதும் அவன் மிகுதிலியொடு பொருது இறந்து வீழ்ந்தபொழுது புட்களெல்லாம் வானிலே நெருங்கி வட்டமிட்டு அவன்மீது 22. களவியல்-31 இளம்) 23. இறை. கள. 20. 24. அகம்-148