பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

} 3 2 அகத்திணைக் கொள்கைகள் களம் - வெறியாடு களம்: இழைத்து-அமைத்து வளநகர்வளம் பொருந்திய கோயிலில்; சிலம்ப ஒலியுண்டாக: உருவச் செந்தினை - அழகிய செந்தினை குருதி-இரத்தம்; தூஉய் - துவி; ஆற்றுப் படுத்த - வரவழிைத்த உருகெழு நடுநாள் - அச்சம் பொருந்திய நள்ளிரவில்.) தள்ளிரவில் இவ்வாறு வெறியாட்டு நடைபெறுகின்றது. அப் பொழுது தலைவியின் வீட்டிலுள்ள காவலாளரும் அறியா வண்ணம் சந்தன மணம் கமழவும் பல்வகைமலர்களாலான மாலை சூட்டியும் தலைவியின் நோய் தணித்தற்குரிய தலைவன் வருகின்றான். களிறாகிய இரையைத் தெரிதற் பொருட்டு ஒதுங்கிய பார்வையோடு மறைந்து இயங்கும் இயல்பினையுடைய வலிய புலியினைப்போல் பதுங்கிப் பதுங்கி வருகின்றான். வந்த வனைத் தலைவி தழுவி முயங்குகின்றாள். தலைவியின் பசலையும் மாறுகின்றது. காதலனால் மாறிற்று என்பதை அறியாது வேலனின் வெறியால்தான் மாறிற்று என்று அன்னையும் பிறரும் மகிழ்கின்றனர். இவர்களின் அறியாமையைக் கண்டு தலைவி நகுகின்றாள். தன்னசை யுள்ளத்து நந்நசை வாய்ப்ப இன்னுயிர் குழைய முயங்குதொறும் மெய்மலிந்து நக்கனென் அல்லனோ யானே எய்த்த நோய்தணி காதலர் வரஈண்டு ஏதில் வேலற்கு உலந்தமை கண்டே." (தன் நசை - தன்னை விரும்பும்; நசை - விருப்பம்; முயங் குதல் - தழுவுதல்; ஏதில் வேலன் - இயல்பில்லாத வேலன்; உலந்தமை அழிந்தமை.) என்பது காமக்கண்ணியார் காட்டும் சொல்லோவியம். தலைவன் வரைவிடை வைத்துப் பிரிந்த காலத்தில் தலைமகள் அவன் பிரிவுக்கு ஆற்றாதிருந்த நிலையில் தோழி தலைமகனை இயற் பழிப்ப தலைவி இயற்பட மொழிவதாக இப்பாடல் அமைந் துள்ளது. களவொழுக்கத்தில் ஒழுகி வரும் அகநானூற்றுத் தலைவன் ஒருவன் சில நாட்களாகத் தலைவியைச் சந்திக்கவில்லை. இதனால் தலைவியின் மேனியில் மாற்றம் காணத் தொடங்கியது. உடல் இளைத்தது; கை வளையல்கள் கழன்று போயின. 114. டிே 22