பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/176

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


158 அகத்திணைக் கொள்கைகள் தந்தையும் தன்னையும் முன்னத்தின் உணர்ப. ' (முன்னம்-குறிப்பு; என்னும் உள்நயம் நினையத் தகும். தலைவி தோழி செவி, நற்றாய் ஆகிய நால்வரும் பெண்பாலார் ஆதலின் சொல்லால் சொல்லிக் கொள்ளலாம் எனவும், தந்தையும் அண்ணனும் நெருங்கிய கேளிரேனும் ஆண்பாலார் ஆதலின் টতে குமரியின் களவினைக் குறிப்பால் உணரச் செய்தல் நல்லது எனவும் அகத்திணை இலக்கணம் வகுத்துக் காட்டும் மனப்படிகளின் நுட்பம் எண்ணி உணர்தற் பாலது. காமர் கடும்புனல் எனத் தொடங்கும் கலிப்பாட்டில் அறத்தொடு நிலையை நிகழ்ச்சி முறையால் வைத்துச் சிறு கதைபோல் வேகமாகச் சொல்லிச் செல்வதை கண்டு மகிழ்க. அறத்தொடு நின்றேனைக் கண்டு திறப்பட என்னையர்க் குய்த்துரைத்தாள் யாய்." என்று அறத்தொடு நிற்கும் முறையினையும் சுட்டிக் காட்டி யிருப்பது நோக்கத் தக்கது. - அறத்தொடு நிற்றலின் நன்னோக்கம் சங்கச் சான்றோர் களின் நெஞ்சைப் பிணித்து பல அரிய பாடல்களை உருவாக்கி யுள்ளது. பிற வழிகள் யாவும் பயனற்றுப் போனபிறகு அறத் தொடு நிற்றல் என்னும் நேர்வழியைத் தலைவியும் தோழியும் மேற் கொள்வர். நாணமும் கற்பும் உயிரனைய இரு பேறொழுக்கங் களாகும்; ஒருவந்தம் காத்துப் போற்றத் தக்கவை. ஆயினும் நானை விட்டேனும் கற்பைத் தலையாகப் போற்றிக் காக்க வேண்டும் என்பது பண்டைத் தமிழர் கண்ட வாழ்க்கை நெறி. உயிரினும் சிறந்தன்று நாணே நாணினும் செயிர்தீர் காட்சிக் கற்புச் சிறந் தன்று. ' என்பது தொல்காப்பியம். நாணத்தைக் காக்க உயிர்விடுக; கற்பைக் காக்க நாணத்தை விடுக; கான்று தெளிவிப்பர் தொல் காப்பியர். அறத்தொடு நிற்பது பெற்றோர்க்கு முன்னதாக இருப்பினும் நாணத்தை விட்டொழிக்க வேண்டுமாதலால் தோழி அறத்தொடு நில்லாத முறையொன்றினால் தோழி திருமணம். 158. களவியல்-47 59. கலி.39 (குறிஞ்சிக்கவி.3) j63. $೪. -