பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/240

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அகத்திணைக் கோள்கைகள் 2 2 2 (அம்பல்-பரவாத அலர்; உயிரேன்-மூச்சு விட்டேனுமில் லேன்: கதுப்பு-கூந்தல்; நாறுதல்-புதிய மணம் கமழ்தல்) "ஊர்ப் பெண்டுகள் உன் மகள் காதலுறவினைப் பேசுவதை அறி வேன், ஆனால் அதுபற்றித் தெரிந்திருந்தும் தெரியாதவள்போல் வானா இருந்தேன். ஒரு நாள் நின் கூந்தல் நறுமணம் வீசு கின்றதே என்று கேட்டுவிட்டேன்' என்று தாய் தன் மகள் உடன்போனதற்குத் தானே காரணமெனக் கூறு கின்றாள். கன்னிப் பெண்களின் கூழையில் மலர் மணத்தற்கு இடம் இல்லை. அன்னை அதுபற்றி வினவியதும் களவு வெளிப் பட்டதாக எண்ணி இனி இல்லத்தில் இருத்தல் பொருந்தாது என்று அன்னைக்கு அஞ்சி அருமை மகள் உடன் போயினாள். இயற்கை வனப்பு மிக்க சூழலில் காதலர்கள் இன்பந் துய்க்குங் கால் காதலன் காதலியின் கருங்குழலில் பூங்கொத்துகளைச் சூடி அணிசெய்து மகிழ்வது இயல்பு. இல்லம் திரும்பும் தலைமகள் தன் குழவிலிருந்து பூவை நீக்கி விடுவாள். மலர் அகன்றாலும் மலர் இருந்த கூந்தல் மணக்குமன்றோ? ஆதலின் தாய் மலரைக் காணா விடினும் அதன் மணத்தை அறிந்து கதுப்பு நறிய நாறும் என்று வினாவுவாளாயினள். முல்லை நிலத்தில் ஒரு நிகழ்ச்சி. இடைமகன் சூடிய முல்லைத் தொடையையும் முல்லைப் பூச்சரத்தையும் புறத்தே தெரியாதபடி தன் கூந்தலுக்குள் மறைத்து வைத்துக் கொள்ளுகின்றாள் முல்லை நிலத்து மங்கை. இவள் தான் பொதிந்து வைத்த நினைவின்றி கூந்தலில் வெண்ணெய் தடவுங்கால் கூழை யுள்ளிருந்த பூ அன்னையின்முன் விழுந்தது. அன்னை நாணினாள். அவளை ஒன்று வினவவில்லை; சினக்கவும் இல்லை. காரணம் அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. இந்த நிகழ்ச்சியைத் தலைவி தோழியிடம் கூறுகின்றாள். - புல்லினத் தாய மகன்குடி வந்ததோர் முல்லை யொருகாழும் கண்ணியும் மெல்லியால் கூந்தலுட் பெய்து முடித்தேன்மன் தோழியாய் வெண்ணெய் உரைஇ விரித்த கதுப்போடே அன்னையும் அத்தனும் இல்லரா யாய்நான அன்னைமுன் வீழ்ந்தன்றப் பூ. 26. கவி-115.