பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/281

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஐந்திணையில் பரத்தமை . 263 செட்டி நாட்டுப் பகுதியில் இன்றும் காணலாம். எல்லா இடங் களில் செல்வர்களிடையேயும் மருத நிலக் கிழார்களிடையேயும், வணிக மன்னர்களிடையேயும், பட முதலாளிகள், நடிகர்கள் இவர் களிடையேயும், இப்பழக்கம் இன்றும் பெரு வழக்காக உள்ளது. எனவே, இக் கொள்கை ஒப்புக் கொள்ளத் தக்கது. எந் நிலைக் கணவனையும் நன்னிலைக் கணவனாகக் கொண்டொழுகுவதே மனைவியின் அருங் குணமாகத் திகழ்ந்தது. தொல்காப்பியமும் சங்க இலக்கியத்தின் மருதத்திணைப் பாடல்களும் நுவலும் பரந்தை கீழ்மகள் அல்லள்; இல்லறத்தின் பகைத்தியுமல்லள். ஆடலும் பாடலும் சான்றவள். கலை பயின்றவள். குடும்பப் பண்பையும் கொண்டவள். தலைவியை வரைந்து கொள்ளுதல் போலப் பரத்தைக் குலத்தாளையும் வரைந்து கொள்ளும் உரிமை தலைவனுக்கு இருந்தமையால் தலைவிபோல் அவளும் உரிமை பெற்றுத் திகழ்கின்றாள், தலைவனையும் தலைவியையும் அன்னவர்தம் குழந்தையையும் மதித்தொழுகும் பெற்றியினள் என்பதனை மருதத் திணைச் செய் யுட்கள் புலப்படுத்துகின்றன. பரத்தமையைத் தொல்காப்பியமும் கடிந்து கூறவில்லை. மாறாக, அவளுடைய கூற்று நிகழும் இடங் கட்கு விதியும் வகுத்துக் கூறியுள்ளது." 6. கணவனும் மனைவியும் ஒத்து இணங்கி வணங்கிப்போகும் நிலையைக் கண்ட சமுதாயம் கணவனின் பரத்தமைக்குப் பச்சைக் கொடியைக் காட்டியது. போலும்! அஃது இல்லறத்திற்குப் பகைமை என்று கருதவும் இல்லை. மனைவியைத் துறந்து பரத்தையே கதியாக ஆடவன் மதி மயங்கித் திரியுங்கால் சமுதாயம் அன்னவனை இகழ்கின்றது; திருத்தவும் முற்படுகின்றது. வள்ளல் பேகன் நல்லூர்ப் பரத்தையை நாடிக் கண்ணகியைத் துறந்தபோது கபிலர், பரணர், அரிசிற் கிழார், பெருங் குன்றுார்க் கிழார் என் புலவர்கள் பேகனைத் தேருட்டிய வரலாறு புறநானூற்றால் அறியக் கிடக்கின்றது. - - ஆகவே ஐந்திணையில் பரத்தை இடம்பெற்றமைக்குத் தமிழ்ச் சமுதாய மனப்பான்மையே காரணமாகலாம். தமிழகத்தில் பரத்தமை பரவிக் கிடந்தநிலை, அதனைச் சமுதாயம் பொறுத்துக் கொண்டிருந்தமை, இசை நடனம் முதலாய கலைத் துறையில் கணிகையருக்கு இருந்த செல்வாக்கு, தம்மை நாடிய ஆடவர்களைப் 5. கற்பியல்-10