பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/322

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


3{}4 அகத்திணைக் கொள்கைகள் ஒன்றாதலானும், அகத்தினை அன்புத்திணை யாதலானும் அகத்துறை எதற்கும் அன்பின் அடிப்படையிலுள்ள புணர்ச்சிக்கு முரணாக உரைகாணல் பெருந்தவறு; அடித்தவறு. பெருங் காமத்தால் தலைவி செய்யும் துணிவுச் செயல் என்பதுவே மிக்க காமத்து மிடல் என்ற தொடரின் பொருளாகும். கழி காமுகன் ஒருவன் ஒரு பெண்ணை வம்பு செய்து கூடுதல் என்ற உரை மரபு எவ்வாற்றானும் பொருந்தாது இத்தகைய செயல்கள் உலகில் நடந்திரா என்பது வாதம் அன்று நடந்தும் இருக்கலாம். இவற்றிற்கு தமிழ் மூதறிஞர்கள் ஆய்ந்து கண்ட அகத்திணைக் கண் இடம் இல்லை என்பது டாக்டர் மாணிக்கனாரின் துணிபு. செய்வ தறிகல்லேன் யாதுசெய் வேன்கொலோ ஐவாய் அரவின் இடைப்பட்டு நைவாரா மையில் மதியின் விளங்கு முகத்தாரை வெளவிக் கொளலும் அற்றெனக் கண்டன்று." (அரவு-பாம்பு, தைவாரா-வருந்தி: மதி- சந்திரன்; வெளவிக் கொளல்-வலிதிற் புணர்தல் ) என்பது குறிஞ்சிக் கலியின் ஒருபகுதி. காதலனும் காதலியும் உறழ்ந்து உரையாடும் காட்சியை ஊடல் நடையில் அமைத்துக் காட்டுகின்றார் கபிலர் பெருமான். தலைவன் தலைவியை இழுத்துத் தழுவிக் கொள்ளுகின்றான். அவர்கட்குள்ளே நடை பெறும் உரையாடல் இது. தலைவி : நான் விரும்பா நிலையில் என்னைக் கைப்பற்றி இழுத்துத் தழுவலாமா? தலைவன் : எனக்கு அங்ஙனம் செய்ய விருப்பமாக இருந்தது. ஆதலால் உன்னைத் தழுவினேன். g தலைவி : தனக்கு இனிது என்று வலிதில் பிறர்க்குத் துன்பம் தருதல் அறமா? தலைவன் : நின் அறிவை மூட்டை கட்டிவை. தமக்கு இனிதென்று மக்கள் நீர் ப. ரு கு வ ா ர் க ள். இனிதா என்று நீரைக் கேட்டுப் பருகுவார் உண்டோ? காமத் துயர்ப்படுகின்றேன்; யாது செய்வதென்று அறியேன். மதியை யொத்த முகத்தினையுடைய பெண்களைக் கைப்பற்றிக் கொள்ளுதலும் அறம் என்று கருதப்பெறும். 47. @ു.-62.