பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/350

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

332 அகத்திணைக் கொள்கைகள் தலைவியிடம் கண்டு மகிழலாம். இங்கு அட்டில் தொழில் தலைவியின் இன்றியமையாத பண்பாக அமைய வேண்டும் என்று கதியிருப்பது கவனிக்கத் தக்கது. தலைவியின் அட்டில் தொழிலை :முளிதயிர் பிசைந்த' என்ற குறுந்தொகைப் பாடல் அழகாகச் சித்திரிக்கின்றது. 冷 இல்லற வாழ்க்கையில் விருந்தோம்பும் பண்பு தலைவிக்கு மிகவும் இன்றியமையாதது." தலைவியிடம் இப்பண்பினை அவளுடைய திருமணத்திற்கு முன்னரே அமைந்து கிடந்தது. தொல்காப்பியரும், தலைவிக்குரிய இப்பண்பினைப் பல இடங்களில் வற்புறுத்தியுள்ளார். எடுத்துக்காட்டாக, - அருந்தொழில் முடித்த செம்மற் காலை விருந்தொடு நல்லவை வேண்டற் கண்ணும்’ என்று கூறுவர். வினைமுற்றி மீளும் தலைவன் விருந்துடன் திரும்பிய காலை தலைவி அவர்கட்கு இனிய வரவேற்பு நல்குவதைக் குறிப்பிடுவது இது. விருந்தோம்புதலும் சுற்றத் தழுவுதலும் தலைவியின் பண்புகளாகும் என்பர் தொல்காப்பியர். விருந்துபுறத் தருதலும் சுற்றம் ஓம்பலும் பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள்' என்ற அவர் விதி காண்க. இராப்பொழுதா யிருப்பினும் வந்த விருந்தைக் கண்டு மகிழா நிற்கும் தலைவியின் உயர் பண்பினை வினைமுற்றி மீளும் தலைவன் தேர்ப்பாகனுக்குக் கூறுவதை நற்றிணைப் பாடலொன்றில் காணலாம். அல்லில் ஆயினும் விருந்துவரின் உவக்கும் முல்லை சான்ற கற்பின் மெல்லியல் குறுமகள் உறைவின் ஊரே." என்ற பாடற் பகுதியில் இதனைக் கண்டு மகிழ்க தலைவனும் தலைவியும் சேர்ந்தே விருந்தோம்புவர். தலைவன் இல்லாக்காலை தலைவிக்கு விருந்தோம்பும் இன்பம் இல்லை. அகநானூற்றுத் தலைவி யொருத்தி இவ்வின்பம் பெறுவதற்கு விரைந்து தேரைக் கடவுமாறு கூறுகின்றான் வினைமுற்றி மீளும் தலைவன். 67. குறுந்- 167. 68. இதனைச் செவிலி'யைக் கூறும் இடத்தில் காண்க. 69. கற்பியல் -5 70, ഫ്ലൈ-11 71. நற்-142