பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/378

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


360 அகித்திணைக் கொள்கைகள் முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல் கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇக் குவளை யுண்கண் குய்புகை கமழத் தான்துழக்(து) அட்ட தீம்புளிப் பாகர் இனிதுஎனக் கணவன் உண்டலின் நுண்ணிதின் மகிழ்தன்று ஒண்ணுதல் முகனே' (முளிதயிர்-முற்றிய தயிர்; கழுவுறு கலிங்கம்-துடைத்துக் கொண்ட ஆடை, கழாஅது-துவையாமல்; உடீஇ. உடுத்துக் கொண்டு: குய்புகை-தாளிப்பின் புகை, கமழ. மணப்ப; துழந்து-துழாவி: அட்ட-சமைத்த தீபுளி பாகர். இனிய புளிக் குழம்பு; ஒள்துதல்-தலைவி.! இறுகிய தயிராதலின் தலைவி புளிக்குழம்பு செய்யும் பொருட்டுத் தன் மெல்விரலால் துழாவித் தாளிதம் செய்தாள். விரைவில் சமைக்க வேண்டும் என்ற விருப்பினளாதலின் தயிர் பிசைந்த கையைத் துடைத்த ஆடையைத் துவைத்தலை மறந் தாள். 'ஏனது சுவைப்பினும் நீகை தொட்டது வானோர் அமுதம் புரையுமால்எமக்கென' விரும்புபவனாதலின் மகிழ்ந்து உண்டான், தலைவி கொண்ட அகமகிழ்ச்சியை அவள் முகம் புலப்படுத்தியது. இயல்பாகவே பொலிவு பெற்ற துதல் மகிழ்ச்சி யால் பின்னும் பொலிவுடையதாயிற்று. அம்மகிழ்ச்சியை மிகுதி யாக வெளிப்படுத்தாமையின் நுண்ணிதின் மகிழ்ந்தன்று: என்றான். இதனால் தலைவி தற்கொண்டானைப் பேணுத் தகை சிறந்தாள் என்ப்தைச் செவிலி உணர்த்துவது அறியப்படும். இங்ஙனமே 'நற்றினைச் செவிலியொருத்தி தன் மகள் நடத்தும் இல்லற வாழ்க்கையை வியந்து கூறுவதைப் பிறிதொரு பாடலில் காணலாம்." குறுத்தொகைச் செவிலி யொருத்தி ஒரு நாள் தலைமகளின் கடிமனைக்குச் சென்று வருகின்றாள். இவள் தலைவியின் அயர அன்பினை வியந்து பேசுகின்றான். 'தலைவன் தலைவியை இறையேனும் பிரியாது உறைகின்றான்; எச்செயல் பொருட்டும் பிரிந்து செல்வதில்லை. அரசன் ஏவல் கடத்தற் கரிதாகலின், அதன்பொருட்டு மாத்திரம் அரிதிற் சில கால் பிரிந்து வேற்றுார் போவான்; போயினும் உடனே மீள் வான்' என்பதாக. 61. குறுந்-167. 62. கற்பியல்-5அடி (12-13) (இளம்) 63. நற்-110, . 64. குறுந்-242