பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/495

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


உள்ளுறை உவமம் 477 தலைவன் பரத்தை வீடே கதியாகக் கிடந்து ஒரு நாள் தன் விடு திரும்புகின்றான். தலைவியைப் பலவாறு தேற்ற முயல் இன்றான்; அவள் குற்ற மற்றவள் என்கின்றான். அதனைப் பொறாத தலைவி 'நீ பேசுவது நன்றாகத்தான் உள்ளது. இப் பேச்சினை என் தங்கையரிடம் (பரத்தையர்) சென்று கூறுக' என்று சொல்லி ஊடுகின்றாள். தலைவியின் கற்பு ஒழுக்கத்தில் அவள் கூற்று நிகழும் இடங்களை யெல்லாம் தொகுத்துக் கூறும் நூற்பாவில் 'தங்கிய ஒழுக்கத்துக் கிழவனை வணங்கி, எங்கை யர்க்கு உரை என இரத்தற் கண்ணும்' என்பதற்கு இப் பாடலை எடுத்துக்காட்டாகக் கொள்வர் இளம்பூரணர் மேற்கூறிய தலைவியின் உள்ளுறை உவமத்தால் விளக்ப் பெறும் பொருள் இது: இங்கு ஆற்றின் அகன்ற துறை பரத்தையக சேரியாகவும், அழகு பெறும்படி புதலொடு வந்து தாழ்ந்த மண மில்லாத பகன்றைப் பூ பாணர் முதலிய வாயில்களுடன் வந்து தங்கின அன்பில்லாத பரத்தையராகவும், அதனை உற நீண்ட தாமரை அப்பரத்தையரிடத்தே சேர்ந்த தலைவனாகவும், அத் தாமரை கள்ளைத் தீதென்று உணர்ந்து வைத்தும் அதனை உண்டு களிக்கின்றவள் முகம்போலத் தளை விடுதல் (மலர்தல்) அன்பில்லாத மகளிரிடத்துப் பெறுகின்ற இன்ப நுகர்ச்சி தீதென்று உணர்ந்து வைத்தும் அதனை நுகர்ந்து மகிழ்கின்ற தலைவ னாகவும் கொள்ளப்பெற்றுத் தலைவி தன் கருத்தை உணர்த்தித் தலைவனிடம் வெறுப்புணர்ச்சி காட்டி ஊடுவதைப் பாட்டின் பகுதியில் கண்டு மகிழ்க. (3) ஒண்சுடர் கல்சேர, உலகூருந் தகையது தெண்கடல் அழுவத்துத் திரை நீக்கா எழுதரூஉம் தண்கதிர் மதியத் தணிநிலா நிறைத்தரப், புள்ளினம் இரை மாந்திப் புகல்சேர, ஒலிஆன்று வள்ளிதழ் கூம்பிய மணிமருள் இருங்கழி பள்ளிபுக் கதுபோலும் பரப்புநீர்த் தண்சேர்ப்ப!'" |ஒண்சுடர் - ஞாயிறு: கல் - மேற்கு மலை; ஊர்தல் - பரவு தல்; அழுவம் - கடற் பரப்பு: திரை - அலை; புகல் - புகு மிடம்; கழி - நெய்தல் நீரோடை) 31. கற்பியல்-6 இளம். 32. நெய்தற் கலி -4