பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/504

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


486 . அகத்திணைக் கொள்கைகள் சுட்டு என்பது, ஒரு பொருளைச் சுட்டிப் பிறிதொரு பொருட் படுதல். நகையாவது, நகையினாற் பிறிதொரு பொருள் உரை நிற்றல். சிறப்பு என்பது, இதற்குச் சிறந்தது இஃது எனக் கூறுவது னானே பிறிதொரு பொருள் கூறக் கிடப்பது. இங்ங்ணம் விளக்கிய உரையாசிரியர் ஒவ்வொன்றுக்கும் எடுத்துக்காட்டுகளையும் தந்துள்ளார். இவற்றைப் பயின்று உளங்கொள்க." ... நச்சினார்க்கினியரின் விளக்கம்: உடனுறையாவது, நான்கு நிலத்தும் உளவாய் அந் நிலத்துடன் உறையும் கருப்பொருளாற் பிறிதொன்று பயப்ப மறைத்துக் கூறும் இறைச்சி. உவமமாவது: அக் கருவாற் கொள்ளும் உள்ளுறை உவமமும் ஏனையுவமமும், நகையும் சிறப்பும் பற்றாது ஒன்று நினைந்து ஒன்று சொல்வனவும், அன்புறு தகுந இறைச்சியுட் சுட்டி வருவனவும் சுட்டெனப் படும். நகையாவது, நகையாடி ஒன்று நினைந்து ஒன்று கூறுதல். ஏனையுவமம் நின்று, உள்ளுறை உவமத்தைத் தத்தம் கருப் பொருட்குச் சிறப்புக் கொடுத்து நிற்பது, சிறப்பு என்னும் உள்ளுறையாகும். இவை ஐந்தும் ஒன்றனை உள்ளுறுத்தி அதனை வெளியிடாமற் கூறுதலின் உள்ளுறை எனப் பெற்றன என்று விளக்குவர் நச்சினார்க் கினியர். - இறைச்சி-விளக்கம்: இனி, இறைச்சிப் பொருள் இன்ன தென்பதை ஒர் எடுத்துக்காட்டு கொண்டு விளக்குவோம். . அன்னாய் வாழிவேண் டன்னை என்னை 578 மலைந்தான் எமக்குத் தழையாயின . பொன்i மணியரும் பினவே என்ன மரங்கொல்? அவர் சார லவ்வே." வேண்டு - விரும்பிக் கேட்பாய் என்னை - எம் பெருமான்: மலைந்தான் - அணிந்து கொண்டனன்; தழை - ஆடை, பொன் வீ - பொன் போன்ற மலர்; அவர் சாரல - அவர் வாழும் சாரலின்கண் உள்ளன) தலைவி ஒருத்தி தலைவன் ஒருவனுடன் களவு முறையில் உறவு கொண்டுள்ளாள். இன்னும் நாடறியத் திருமணம் நட்ை பெற வில்லை. இந்த உறவினைத் தலைவியின் தமர் அறியார். ஆகவே,அவர்கள் வேறொருவனுக்கு மணம் பேசுகின்றனர். தலைவி 3. டிெ -46 இன் உரை (இளம்) 4. ஐங்குறு:- 201 .