பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/546

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


528 அகத்திணைக் கொள்கைகள் தொடர்ந்து கூறுவாள். 'நீ பரத்தையர் கூட்டத்தினுள்ளும் இளையாள் ஒருத்தியை நயந்து கொண்டனை என்று ஊராரிடம் பேச்சு எழுவதாயிற்று. அஃதை என்பாளின் தந்தை சோழன் ஒரு புறமும் சேரர் பாண்டியர் மறுபுறமும் இருந்து வெண்னெல் விளை யும் இடங்களையுடைய பருவூர்ப் போர்க் களத்தில் நடைபெற்ற போரில் வெற்றி பெற்ற சோழன் பகை வேந்தர்களின் களிறுகளைக் - கவர்ந்தபோது எழுந்த ஆரவாரம் போல, நின்பரத்தைமை பலர் வாய்ப்பட்டு அலராகிவிட்டது. இவ்வாறு கூறி வாயில் மறுக்கின் றாள் தோழி. - r நறவுண்...யூர" என்றதில் பரத்தையர் சேரியைச் சூழ்ந்து திரியும் பாணன் காமஞ் சாலா இளமை யோளாகிய பரத்ை தயைத் தலைமகனோடு கூட்டத் தலைமகன் அவளை முயங்கியவிடத்து அவள் களிப்படைகின்றாள்; நீங்கியவழி மெலிகின்றாள் என்ற செய்தி அடங்கியுள்ளது. இதன்கண் பொய்கையைப் பரத்தையர் சேரியாகவும், முள்ளுடைப் பிரப்பின் கொடியை அதனைச் சூழ்ந்து திரியும் நெஞ்சு வலிய பாணனாகவும், ஆம்பல் இலையைக் காமஞ் சாலாக் குறுமகளாகவும், அதனைக் கொடி துடக்கியதனைப் பாணன் அவளைத் தலைமகனோடு கூட்டியதாகவும்,வாடையைத் தலைமகனாகவும், அது தூக்குந்தோறும் அவ்விலை வீங்கித் தூக்காதவழி நெகிழ்ந்ததனைத் தலைமகன் அவளை முயங்கியவழி அவள்களிப்புற்று, நீங்கியவழி மெலிந்த தன்மையாகவும் கொள்க. மற்றும், இதில் நறவுண்ட...தெறிக்கும் என்றது நறவு கலந்த இழிந்த நீரையுண்ட இறால் அச்செருக்கினால் கூட்டுமுதற்றெறித் தது போலப் பரத்தையரின் இழிந்த இன்பத்தை நுகர்ந்த தலைவ னும் செருக்குற்றுத் தனக்குப் புறம்பாகிய வேறிடத்தே தங்கிக் கிடக்கின்ற தன்மையாகவும் கொள்க. இதில் மருதத் திணை முதல் கருப்பொருள்களுடன் உரிப்பொருள் (ஊடல்) சிறந்த முறை யில் இணைக்கப்பெற்றுள்ளதையும் உளங்கொண்டு மகிழ்க. இன்னோர் அகப்பாடலிலும்" தோழி தலைமகனை வாயில் மறுக்கும் செய்தி அழகாகச் சித்திரிக்கப்பெறுகின்றது. இதில் குறிப்பிடப்பெறும் தலைவனும் பரத்தையிற்பிரிந்து திரும்பினவன், இதிலும் மருதநில வருணை மிக அழகாக வருகின்றது. ஓர் அகன்ற வயல். நீர்வள மிக்க அந்த வயலில் தாமரை மண்டிக் கிடக் கின்றது. தாமரை இலைகள் யானைச் செவிபோல் காட்சி அளிக் 22, ി.-176.