பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/63

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


களவு பற்றுய விளக்கம் 45 வாழும் கற்பென்னும் திண்மை தமிழர் ஒழுகலாறாகிய களவொழுக்கத்தின் முடிந்த பயனாகும். உலகியலில் நேரிடும் பலவகை இடையூறுகளால், ஒருவரையொருவர் மணந்து கொள்ள இயலாமல், உள்ளப் புணர்ச்சியளவே கூடிவாழ்ந்து, பின்னர் இறந்த காதலரும் தமிழகத்தில் இருந்தனர் என்பதற்குத் தருமதத்தன்-விசாகை என்பாரின் வரலாறே சான்றாகும்.' இவர்கள் இருவரும் யாழோர் மணமுறையில் பொருந்தியவர்கள் எனத் தம்மை நோக்கி ஊரார் கூறும் பழிமொழியை விலக்கித் தம்வாழ்நாள் முழுவதும் மெய்யுறு புணர்ச்சியை விரும்பாது, உள்ளப் புணர்ச்சியளவில் நின்று உயிர் துறந்த வரலாறு நாம் நினைவு கூர்தற்பாலது. கந்தர்வ வழக்கில் மெய்யுறு புணர்ச்சி முதற்கண் தோன்றும். அதன் பயிற்சியால் உள்ளப் புணர்ச்ச நிலைபெற்றுச் சாகுமளவும் காதலர்கள் கூடி வாழ்தலும் உண்டு; உள்ளப் புணர்ச்சி தோன்றாது, தம் எதிர்ப்பட்டாரைக் கூடி மாறுதலும் உண்டு. சிந்தாமணியில் காணும் சீவகன்-தேசிகப் பாவை கூட்டம் இதற்கு ஒர் எடுத்துக்காட்டாகும். என்றும் பிரியாநிலையில் நிறை கடவாது அன்பினாற் கூடும் உள்ளப் புணர்ச்சியே களவொழுக்கத் தின் சிறப்பியல்பாகும். இதுவே தமிழியல் கூறும் களவு மனத் திற்கும், வடநூல் குறிப்பிடும் கந்தர்வ மணத்திற்கும் உள்ள உயிர் நிலையாய வேற்றுமையாகும். இதனால்தான் தொல் காப்பியனார் இதனை 'அன்போடு புணர்ந்த ஐந்திணை மருங்கிற் காமக் கூட்டம்" என்று குறிப்பிட்டார்; குறுந்தொகைப்புலவரும் அன்புடை நெஞ்சம் தாங்கலந்தனவே' என உணர்த்தினார். ஆரிய மணமாகிய கந்தர்வத்திற்கும் தமிழரின் களவு மணத் திற்கும் உள்ள வேற்றுமையையும், தமிழியல் வழக்கமெனச் சிறப் பித்து உரைக்கப் பெறும் களவொழுக்கத்தின் தூய்மையினையும், ஆரிய அரசன் பிரகத்தனுக்கு அறிவிக்கும் நோக்கத்துடன்தான் கபிலரின் 'குறிஞ்சிப் பாட்டும் எழுந்தது. இது, தலைவியின் வேற்றுமை கண்டு வருந்திய செவிலிக்குத் தோழி அறத்தொடு நிற் கும் சொல்லோவியமாகும். சமயக் கணக்கர் மதி வழி கூறாது, 17. மணிமே. சிறைசெய். வரி (82-142) 18. சிந்தா. பதுமையார் இலம்பகம் 19. களவியல். 1 20. குறுந். 40