பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/634

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


618 - அகத்திணைக் கொள்கைகள் கையிலேந்தி மடல் மீது இவர்ந்து தெருவில் வருவான் (டிெ.17). இதுவே மடலேறுதல்' எனப்படும். இதனால் தலைவனின் மனத் திட்பத்தையும் அவன் காதலுக்கு இலக்கான நங்கையையும் ஆஹரார் அறிவர்; மேலும் அரம்போலும் கூரிய பனங்கருக்குப் பட்டுப்பட்டு அவன் மேனியினின்றும் பெருகி வரும் குருதியொழுக் கினைக் கண்டு அவன்மீது இரக்கமும் கொள்வர். இன்ன வளுக்கும் இன்னவனுக்கும் நட்பு உண்டு என்பதை அறிந்து அதனை வெளிப்படப் கூறிப் பழிப்பர்; அது கேட்டுத் தமர் மணம் புரிவிப்பர் (கலி - 142). இத்தகைய நிகழ்ச்சி நடை பெறாமலேயே பெரும்பாலான மணங்கள் நிறைவு பெற்றுவிடும் என்று கொள்ள ←ly FᎢ Lü . ' தலைவனின் பொங்கிய காதலுக்குத் தோழி செவி சாயாத போதும், இருவரும் சந்திக்கக் களம் அமைத்துத் தர அவள் மறுத்த போதும், தலைவனின் கையுறையை ஏற்க மறுத்தபோதும், இன்னும் பலவாறும் கூட்டம் நிகழாதவாறு நாட்கடத்தும் போதும் தலைவன் தோழியிடம் மடலேறும் தனது திட்டத்தை வெளியிடுவான். தலைவியின் அருமையைத் தலைவன் உணரவைப் பதற்கும், தலைவனின் உறுதியைத் தான் உணரவேண்டும் என்பதற்குமே தோழி இங்ஙனம் காலம் கடத்துவாள். இத் திட்டத்தை அறியும் தோழி சிறிது கலக்கத்தை அடைவாள், அதன் பின்னர் தோழியின் துணையால் களவு நீட்டிக்கும்; ஆயினும், விரைந்து மணம் முடிக்கும் திட்டத்தில் குறிக் கொண்டே நிற்பாள் தோழி. மடல் விலக்கு மடலேறத் துணிந்தமை கேட்ட தோழி இனி இவன் மடலேறவும் உட்கொண்டு, தன் நாணினை விட்டு வந்து மடலேறினால் அவன் அருள் என்னவாகும் என்று கூறியும் (திருக்கோவை - 77), தலைவியின் உருவத்தில் மொழி, நடை எழுதுதல் இயலாது என்று கூறியும் (78), அவயவங்களை எழுதுதல் அரிது (79), தலைவியின் எண்ணமறிந்து வருவேன், அதுவரை. பொறுத்திடுக எனக் கூறியும் (80), தலைவன் குறையை முடித்துத் தருவதாகக் கூறியும் (81) மடல் ஏறுதலை விலக்குவள். இதுவே ੋ விலக்கு எனப்படும். எ - டு : திருக்கோவை, (77-81).குறள். முன்னிலைப் புறமொழி: இது, கூறப்பெறும் செய்தியைக் கேட்டறிதற்குரியவர் முன்னே இருப்பவும், அவரை விளித்துக் சுறாமல், வேறொருவரையேனும், பிறிதொரு பொருளையேனும்