பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/8

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நூல்முகம் மின்இலங்கு திருவுருவும், பெரிய தோளும், கரிமுனிந்த கைத் தலமும், கண்ணும், வாயும், தன்அலர்ந்த நறுந்துழாய் மலரின் கீழே தாழ்ந்துஇலங்கு மகரம்சேர் குழையும் காட்டி, என்நலனும், என்நிறையும், என்சிந்தையும் என்வளையும் கொண்டு; என்னை ஆளும் கொண்டு பொன்அலர்ந்த நறுஞ்செருந்திப் பொழிலி னுாடே புனல் அரங்கம் ஊர்என்று போயி னாரே." -திருமங்கையாழ்வார் உலக மொழிகளனைத்திலுமுள்ள இலக்கியங்களிலெல்லாம் காதல் கூறு இன்றியமையாதுஇருப்பினும் நந்தமிழ்மொழியில் அது திணை, துறை என்று வரையறையில் ஒருநெறிப்பட்டு வாழ்க்கை நெறியாக அமைந்திருந்தல் தனிப் பெருஞ்சிறப்பாகும். இக் காதல்பற்றிய இலக்கியம் அகப்பொருள் என்ற திருநாமமும் பெற்றது. அகப்பொருள் எ ன் ற | ல் தமிழ், தமிழ் என்றால் அகப்பொருள் என்று பேசும் அளவுக்குச் சிறப்பினை யும் பெற்றுத் திகழ்வது தமிழ் மொழிக்குக் கிடைத்த தனிப்பெருஞ் சிறப்பாகும். சங்க இலக்கியம் முதல் பிற்கால இலக்கியம் வரை அகப்பொருள் கூறுகளமைந்த இலக்கியம் பெருகி இருத்தலும் இத்தகைய இலக்கியத்திற்கு இலக்கணமும் அமைந்து அதனை நெறி பிறழாதிருக்கச் செய்திருத்தலும் அந்த இலக்கிய வகையின் பெருமையை மேலும் உயர்த்துகின்றது. அகஇலக்கியத்தின் கொள்கைகள் எல்லாம் அடங்கிய ஒரு தனி நூல் முழு நூலாக எழுதவேண்டுமென்ற என் நீண்ட நாள் அவா திருப்பதியில் நிறைவேறியது. "பைந்தமிழ்ப் பின்சென்ற 1. திருநெடுந்தாண்டகம்-25