பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல்-10 பாங்கற் கூட்டம் இடந்தலைப் பாட்டின் பின்னர் தலைவனைக் காண்கின்றான் அவன் ஆருயிர்த் தோழன். தலைவியை நினைந்து ஆற்றா நிற்கும் தலைவனின் முகவாட்டத்தையும் சோர்வையும் கண்டு, அவனை அடியிற் கொண்டு முடிகாறும் நோக்கி, வளர் ஒளி இள ஞாயிற்றின் வனப்புடைய திருவொளி மழுங்கும் படி, எம்பெரு மாற்கு இன்று நேர்ந்த வாட்டம் என்னையோ? என்று உசாவு கின்றான். இதனைப் மணிவாசகப் பெருமான் உயர் மதிற் கூடலின் ஆய்ந்த ஒண்திந் தமிழின் துறைவாய் நுழைந்தனையோ? அன்றி ஏழிசைக் சூழல் புக்கோ?' என்று உணர்த்துவர். இது 'தலைவனைப் பாங்கன் வினாதல்’ என்ற துறையின்டாற் படும். காமத்தைப் பற்றி வெளிப்படையாக உரையாடுதல் ஆண் நண்பர் களின் இயல்பாக இருப்பினும் மணிவாசகப் பெருமான் உயர்ந்த கலைப் பண்புடனும் நாகரிகப் பண்புடனும் இதனைப் புலப்படுத் துவர். - . தோழனின் இந்த வினாவுக்குத் தலைவன் சிறிதும் மறை வின்றிப் பெருமிதம் தோன்றத் தன் நிலைமையை எடுத்துரைக் கின்றான். நெருநல் இத்தகைய வனப்புடைய ஒருத்தியைக் கண்டு என் உள், ளம், பள்ளத்து வழி வெள்ளம் போல் ஓடி இவ் வகைத்தாயிற்று என்று நடந்த வரலாற்றைக் கூறுவான். இஃது 'உற்ற துரைத்தல் என்ற துறையின்பாற் படும். நற்றிணைத் அலைவன் ஒருவன் இவ்வாறு கூறுவான்: கழைபாடு இரங்கப் பல்லியம் கறங்க ஆடுமகள் நடந்த கொடும்புரி நோன்கயிற்று. அதவத் தீங்கனி அன்ன செம்முகத் துய்த்தலை மந்தி வன்பறழ்துங்க, 1. திருக்கோவை. 20