பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

களிற்றியானை நிரை

௧௪௩


வாயே யாகுதல் வாய்த்தனம் தோழி
நிரைதார் மார்பன் நெருநல் ஒருத்தியொடு
வதுவை அயர்தல் வேண்டிப் புதுவதின்
இயன்ற அணியன் இத்தெரு இறப்போன்

க0) மாண்டொழின் மாமணி கறங்கக் கடைகழிந்து
காண்டல் விருப்பொடு தளர்புதளர் போடும்
பூங்கட் புதல்வனை நோக்கி நெடுந்தேர்
தாங்குமதி வலவஎன் றிழிந்தனன் தாங்காது
மணிபுரை செவ்வாய் மார்பகஞ் சிவணப்

கரு) புல்லிப் பெரும செல்லினி அகத்தெனக்
கொடுப்போற் கொல்லான் கலுழ்தலின் தடுத்த
மாநிதிக் கிழவனும் போன்மென மகனொடு
தானே புகுதந் தோனே யானது
படுத்தனென் ஆகுதல் நாணி இடித்திவன்

உ0) கலக்கினன் போலுமிக் கொடியோன் எனச்சென்
றலைக்குங் கோலொடு குறுகத் தலைக்கொண்
டிமிழ்கண் முழவின் இன்சீர் அவர்மனைப்
பயிர்வன போலவந் திசைப்பவும் தவிரான்
கழங்கா டாயத் தன்றுநம் அருளிய

உரு) பழங்கண் ணோட்டமும் நலிய
அழுங்கினன் அல்லனோ அயர்ந்ததன் மணனே.

-1செல்லூர்க் கோசிகன் கண்ணனார்.

(சொ - ள்.) க-௬. தோழி -, செறுநரும் விழையும் செயிர் தீர் காட்சி - பகைவரும் விரும்பும் குற்றமற்ற அழகினையுடைய, சிறுவர்ப் பயந்த செம்மலோர் - மக்களைப் பெற்ற தலைமையை யுடையோர், இம்மை உலகத்து இசையொடும் விளங்கி - இவ்வுலகத்தே புக ழொடும் விளக்கமுற்று, மறுமை யுலகமும் மறுவின்று எய்துப என. மறுமை யுலக வாழ்வினையும் குற்றமின்றி எய்துவர் என்று, பல் லோர் கூறிய பழமொழி யெல்லாம் - பலருங் கூறிய பழைய மொழிகளெல்லாம், வாயே ஆகுதல் வாய்த்தனம் - உண்மையே யாதலைக் கண்கூடாகக் காணப் பெற்றேம்;

எ-௯. நிரை தார் மார்பன் - மலர் வரிசையாலாய மாலையைத் தரித்த மார்பனாகிய நம் தலைவன், நெருநல் - நேற்று, ஒருத்தியொடு வதுவை அயர்தல் வேண்டி - ஒருத்தியை மணம் செய்து கொள்ள விரும்பி, புதுவதின் இயன்ற அணியன் - புதிதாக இயன்ற ஒப்பனை யுடையனாகி, இத்தெரு இறப்போன் - இத் தெருவினைக் கடந்து செல்வோன்,

க0-௨. மாண் தொழில் மா - மாட்சியுற்ற தொழிலிற் சிறந்த (அவனது) குதிரையின், மணி கறங்க - மணி ஒலிக்க (அதனைக் கேட்டு), கடை கழிந்து - தலைவாயிலைக் கடந்து சென்று, காண்டல்


(பாடம்) 1. செயலூர்க் கோசங் கண்ணனார்.