பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/157

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

௧௫௪

அகநானூறு

[பாட்டு


இலங்கை மேற் செல்லுதற் பொருட்டுத் திருவணைக் கரையின் ஞாங்கரிருந்த பெரிய ஆலமரத்தின் கீழே, தமக்குத் துணைவராயினாரொடு, அரிய மறைகளைச் சூழுங்கால், ஆங்குள்ள பறவைகள் ஒலிக்காதவாறு தன் ஆணையால் அடக்கினன் என்றதொரு வரலாறு கூறப்பட்டது.

(உ - றை.) "பரதவர் தம் முயற்சியானே வேட்டை வாய்த்ததாகிலும், குறுங்கண் வலையைப் பாராட்டி அம் முயற்சியாலுண்டான அயிலை யைக் கடலினின்றும் நீக்கி, எல்லார்க்கும் பகுத்துக் கொடுத்து மகிழ்வித் தாற் போல, அவரும் தம்முடைய முயற்சியானே வதுவை கூடிற்றாயினும் அதற்குத் துணையாக நின்ற என்னைக் கொண்டாடி, நின்னைப் பெரிய இச் சுற்றத்தினின்றுங் கொண்டுபோய்த் தம்மூரின்கண்ணே நின்னைக் கொண்டு விருந்து புறந்தந்து தம்மூரை யெல்லாம் மகிழ்விப்பர் என்ற வாறு."

"நெய்தற்பூவானது, ஞாழலும் புன்னையுங் கரையிலே நின்று தாதை யுதிர்த்துப் புறஞ்சூழ, நீரிடத்துத் தன்னை விடாதே அலைகள் சூழ நடுவே நின்று செருக்கி வளர்ந்து பின்னை விழவணி மகளிர் அல்குலுக்குத் தழை யாய்ப் பயன்பட்டாற்போல, இரு முது குரவர் புறங்காப்ப ஆயவெள்ளத் தார் மெய்யை விடாதே சூழ்ந்து புறங்காப்ப, இப்படிச் செல்வத்தால் வளர்ந்த நீயும் நம் பெருமானுடைய இல்லறமாகிய பிரிவிற்குத் துணையாகப் போகா நின்றாயன்றோ வென்று வியந்து கூறியவாறு."71. பாலை


[பொருள்வயிற் பிரிந்தவிடத்து ஆற்றாளாய தலைமகட்குத் தோழி சொல்லியது.]


நிறைந்தோர்த் தேரும் நெஞ்சமொடு குறைந்தோர்
பயனின் மையிற் பற்றுவிட் டொரூஉம்
நயனின் மாக்கள் போல வண்டினம்
சுனைப்பூ நீத்துச் சினைப்பூப் படர

ரு) மையின் மானினம் மருளப் பையென
வெந்தாறு பொன்னின் அந்தி பூப்ப
ஐயறி வகற்றுங் கையறு படரோ
டகலிரு வானம் அம்மஞ் சீனப்
பகலாற்றுப் படுத்த பழங்கண் மாலை

க0) காதலர்ப் பிரிந்த புலம்பின் நோதக
ஆரஞர் உறுநர் அருநிறஞ் சுட்டிக்
கூரெஃ கெறிஞரின் அலைத்தல் ஆனாது
எள்ளற இயற்றிய நிழல்காண் மண்டிலக்
துள்ளூ தாவியிற் பைப்பய நுணுகி

க௫) மதுகை மாய்தல் வேண்டும் பெரிதழிந்
திதுகொல் வாழி தோழி என்னுயிர்