பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71

களிற்றியானை நிரை

௧௫௫



விலங்குவெங் கடுவளி எடுப்பத்
துளங்குமரப் புள்ளில் துறக்கும் பொழுதே.

- அந்தி யிளங்கீரனார்.


(சொ - ள்.) க௬. தோழி வாழி -,

க-௪. நிறைந்தோர்த் தேரும் நெஞ்சமொடு - செல்வம் நிறைந் தோரை ஆராய்ந்தடையும் உள்ளத்தால், குறைந்தோர் பயன் இன்மையின் - செல்வம் குறைந்தோரால் பயன் அடைதல் இன்மையின், பற்று விட்டு ஒரூஉம் - அவர்பாலிருந்த பற்றினை யொழித்து நீங்கும், நயன் இல் மாக்கள் போல - நடுநிலை இல்லா மக்களைப்போல, வண்டினம் சுனைப்பூ நீத்துச் சினைப்பூப் படர- வண்டின் கூட்டங்கள் சுனைப் பூக்களை ஒழித்துச் சினைப் பூக்களை யடையவும்,

ரு-௯. மையில் மான் இனம் மருள - குற்றமற்ற மான் கூட்டம் வருந்தவும், பையென வெந்து ஆறு பொன்னின் அந்திபூப்ப - உலையிற் காய்ந்து மெல்லென ஆறிவரும் பொன்னின் நிறம்போலச் செக்கர் வானம் பூத்தலைச் செய்யவும், ஐ அறிவு அகற்றும் கையறு படரோடு - வியக்கத்தக்க அறிவினைப் போக்கும் செயலற்ற துன்பத்துடன், அம் மஞ்சு அகல் இரு வானம் ஈன - அழகிய மேகங்களை அகன்ற பெரிய வானம் தரவும், பகல் ஆற்றுப் படுத்த பழங்கண் மாலை - ஞாயிற்றைப் போக்கிய துன்பத்தினைத் தரும் மாலைக்காலமானது,

க0- உ, காதலர்ப் பிரிந்த புலம்பின் நோதக - காதலரைப் பிரிந்த தனிமையால் வருந்தியிருக்கவும், ஆர் அஞர் உறுநர் அருநிறம் சுட்டி. - மிக்க துன்பத்தை அடைந்திருப்பா ரொருவரது அரிய மார்பினைக் குறித்து, கூர் எஃகு எறிஞரின் - கூரிய வேலை எறிவார்போல, அலைத்தல் ஆனாது - வருத்துதலை ஒழியாது ;

க௩-௫. எள் அற இயற்றிய நிழல்காண் மண்டிலத்து உள் - இகழ்ச்சியற இயற்றப்பெற்ற உருவங்காணும் கண்ணாடியின் அகத்தே, ஊது ஆவியில் - ஊதிய ஆவி முன் பரந்து பின் சுருங்கினாற்போல், பைப்பய நுணுகி - சிறிது சிறிதாகக் குறைந்து வந்து, மதுகை மாய்தல் வேண்டும் - என் வலிமை மாய்தல் வேண்டியிரா நின்றது;

கரு-அ. வெம் கடு விலங்கு வளி எடுப்ப - மிக்க கடிய சூறாவளி அலைப்ப, துளங்கும் மரப் புள்ளில் - அசையும் மரத்திலுள்ள பறவை போல, பெரிது அழிந்து என் உயிர் துறக்கும் பொழுது - மிகவும் அழிவுற்று என்னுயிர் இவ்வுடலைத் துறந்தேகும் காலம், இது கொல் - இதுவே போலும்.

(முடிபு) தோழி வாழி, பழங்கண் மாலை அலைத்தல் ஆனாது; மதுகை மாய்தல் வேண்டும்; என் உயிர் துறக்கும் பொழுது இதுகொல்.

படர, பூப்ப, ஈனப் பகலாற்றுப் படுத்த பழங்கண் மாலை என்க.

(வி - ரை.) குறைந்தோர் என்றது, தமது பொருளை வழங்கி வறிய ராயினவர் என்றபடி. நயன் - நன்றியறிவு என்றுமாம். சுனைப்