பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

களிற்றியானை நிரை

௧௮௩



தொடுங்கினள் கிடந்த ஓர்புறந் தழீஇ
முயங்கல் விருப்பொடு முகம்புதை திறப்ப
அஞ்சினள் உயிர்த்த காலை யாழநின்
௨ரு) நெஞ்சம் படர்ந்த தெஞ்சா துரையென

இன்னகை இருக்கைப் பின்யான் வினவலின்
செஞ்சூட் டொண்குழை வண்காது துயல்வர ,
அகமலி உவகையள் ஆகி முகனிகுத்
தொய்யென இறைஞ்சி யோளே மாவின்
௩0) மடங்கொள் மதைஇய நோக்கின்
 
ஒடுங்கீர் ஓதி மாஅ யோளே.

--நல்லாவூர் கிழார்.

(சொ - ள்.) க-௪. உழுந்து தலைப்பெய்த கொழுங் களி மிதவை - உழுத்தம் பருப்புடன் கூட்டிச் சமைத்த செவ்விய குழைதலையுடைய பொங்கலொடு, பெருஞ் சோற்று அமலை நிற்ப - பெரிய சோற்றுத் திரளையை உண்டல் இடையறாது நிகழ, நிரை கால் தண் பெரும் பந்தர் - வரிசையாகிய கால்களையுடைய குளிர்ந்த பெரிய பந்தரில், தருமணல் ஞெமிரி - கொணர்ந்திட்ட மணலைப் பரப்பி, மனை விளக்கு உறுத்து - மனையின்கண் விளக்கினை ஏற்றி வைத்து, மாலை தொடரி - மாலைகளைத் தொங்கவிட்டு, -

ரு -க0. கோள் கால் நீங்கிய கொடுவெண் திங்கள் - தீய கோள்களின் தொடர்பு நீங்கப்பெற்ற வளைந்த வெள்ளிய திங்களை, கேடு இல் விழுப்புகழ் நாள் தலை வந்தென - குற்றமற்ற சிறந்த புகழினையுடைய உரோகணி எனும் நாள் அடைந்ததாக, கனை இருள் அகன்ற கவின் பெறு காலை - அந்நாளிலே மிக்க இருள் நீங்கிய அழகுபொருந்திய விடியற் காலையில், உச்சிக் குடத்தர் புது அகல் மண்டையர் - உச்சியில் குடத்தினையுடையரும் கையினிற் புதிய அகன்ற மண்டை எனும் கலத்தினையுடையரும் ஆகிய, பொது செய் கம்பலை முதுசெம் பெண்டிர் - மணத்தினைச் செய்து வைக்கும் ஆரவாரமுடைய முதிய மங்கல மகளிர், முன்னவும் பின்னவும் முறை முறை தரத் தர - முன்னே தருவனவும் பின்னே தருவனவும் முறைமுறையாகத் தந்திட,

கக-௬, புதல்வன் பயந்த திதலை அவ் வயிற்று - மகனைப் பெற்ற தேமலுடைய அழகிய வயிற்றினை யுடைய, வால் இழை மகளிர் நால்வர் கூடி - தூய அணிகளையுடைய மகளிர் நால்வர் கூடி நின்று, கற்பினின் வழாஅ நற்பல உதவி - கற்பினின்றும் வழுவாது நன்றாய பல பேறுகளையும் தந்து, பெற்றோன் பெட்கும் பிணையை ஆகென - நின்னை எய்திய கணவனை விரும்பிப் பேணும் விருப்பத்தையுடையை ஆக என்று வாழ்த்தி, நீரொடு சொரிந்த ஈர் இதழ் அலரி - நீரோடு கூட்டிப் பெய்த குளிர்ந்த இதழ்களையுடைய பூக்கள், பல் இருங் கதுப்பின் நெல்லொடு தயங்க - மிக்க கரிய கூந்தலில் நெற்களுடன் விளங்க,