௧௬அகநானூறு[பாட்டு
[பொருள்வயிற் பிரியக் கருதிய தலைமகன் தன்னெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்கியது.]
அளிநிலை பொறாஅ தமரிய முகத்தள்
விளிநிலை 1கேளாள் தமியள் மென்மெல
நலமிகு சேவடி நிலம்வடுக் கொளாஅக்
குறுக வந்துதன் கூரெயிறு தோன்ற
௫)வறிதகத் தெழுந்த வாயல் முறுவலள்
கண்ணிய துணரா அளவை யொண்ணுதல்
வினைதலைப் படுதல் செல்லா நினைவுடன்
முளிந்த ஓமை முதையலங் காட்டுப்
பளிங்கத் தன்ன பல்காய் நெல்லி
௧௦)மோட்டிரும் பாறை ஈட்டுவட் டேய்ப்ப
உதிர்வன படூஉம் கதிர்தெறு கவாஅன்
மாய்ந்த போல மழுகுநுனை தோற்றிப்
பாத்தி யன்ன குடுமிக் கூர்ங்கண்
விரனுதி சிதைக்கும் நிரைநிலை அதர
௧௫)பரன்முரம் பாகிய பயமில் கானம்
இறப்ப எண்ணுதி ராயின் அறத்தா
றன்றென மொழிந்த தொன்றுபடு கிளவி
அன்ன வாக என்னுநள் போல
முன்னம் காட்டி முகத்தின் உரையா
௨௦)ஓவச் செய்தியின் ஒன்றுநினைந் தேற்றிப்
பாவை மாய்ந்த பனிநீர் நோக்கமொ
டாகத் தொடுக்கிய புதல்வன் புன்றலைத்
தூநீர் பயந்த துணையமை பிணையல்
மோயினள் உயிர்த்த காலை மாமலர்
௨௫)மணியுரு இழந்த அணியழி தோற்றம்
கண்டே கடிந்தனம் செலவே ஒண்தொடி
உழையம் ஆகவும் இனைவோள்
பிழையலள் மாதோ பிரிதும்நாம் எனினே.
-பாலைபாடிய பெருங்கடுங் கோ.
(சொ-ள்) ௧-௭. (நெஞ்சே!) ஒள்நுதல் = ஒளி பொருந்திய நெற்றியினளாகிய நம் தலைவி, அளிநிலை பொறாது அமரிய முகத்தள் = நாம் அளிசெய்யும் நிலையினைப் பொறாமல் மாறுபட்ட முகத்தினளாய், விளிநிலை கேளாள் = நாம் அழைத்தலைக் கேளாமலே, தமியள் = நாண் முதலியவற்றைத் துறந்தனளாய், மென் மெல நலம்மிகு சேவடி நிலம் வடுக்கொளா குறுக வந்து = மென்மெலச் செல்லும் இயல்பினவாய நன்மை மிக்க சிவந்த அடியால் நிலத்தில் சுவடு
1. கொள்ளாடமியண்.