உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5]களிற்றியானை நிரை௧௭

தோன்ற அண்மையில் வந்து, கூர் எயிறு தோன்ற வறிது அகத்து எழுந்து வாய் அல் முறவலள் = தனது கூரிய பற்கள் தோன்றச் சிறிதே தன்னிடத்தெழுந்த மெய்ம்மை யல்லாத முறுவலுடையளாகி, கண்ணியது உணரா அளவை = யாம் எண்ணியதை உணரும் முன்பே, வினை தலைப்படுதல் செல்லா நினைவுடன் = நாம் பொருள்வயிற் பிரிதலை உடன்படாத எண்ணத்துடன்,

௮-௧௬. முளிந்த ஓமை முதையல் காட்டு நெல்லி பளிங்கத்து அன்ன பல் காய் = காய்ந்த ஓமை மரங்களையுடைய முதிய காட்டில் நெல்லியினது பளிங்கு போன்ற பல காய்கள், மோடு இரும் பாறை ஈட்டு வட்டு ஏய்ப்ப உதிர்வன படூஉம் = உயர்ந்த பெரிய பாறைகளில் சிறார் விளையாடற்கு ஈட்டி வைத்திருக்கும் வட்டுக்களைப் போல உதிர்ந்து கிடக்கும், கதிர் தெறு கவான் = ஞாயிற்றின் கதிர்கள் காயும் பக்க மலைகளில், பாத்தி அன்ன குடுமி கூர் கல் = பகுத்து வைத்தாலொத்த தலையினையுடைய கூரிய கற்கள், மாய்த்த போல மழுகு நுனை தோற்றி = தீட்டப்பட்டன போலத் தேய்ந்த கூர்முனையைத் தோற்றுவித்து, விரல்நுதி சிதைக்கும் நிரை நிலை அதர = வழிச்செல்வார் விரலின் முனையைச் சிதைக்கும் கல்லொழுங்குபட்ட நிலைமையையுடைய வழிகளைக் கொண்ட, பரல் முரம்பு ஆகய பயம் இல் கானம் = பரற் கற்களையுடைய மேட்டு நிலமாகிய வளன்ற்ற காட்டினை, இறப்ப எண்ணுதிர் ஆயின் = கடந்து செல்ல எண்ணுவீராயின்,

௧௬-௨௬. அறத்தாறு அன்று என மொழிந்த தொன்று படு கிளவி = (காதலுடையாரை விட்டுப் பிரிதல்) அறநெறி அன்றெனக் கூறிய பழமை பொருந்திய சொல், அன்ன ஆக என்னுநள் போல = அங்ஙனம் சொல்லிய அளவில் கழிக என்று கூறுவாள் போல, முன்னம் காட்டி முகத்தின் உரையா = அக்குறிப்பினை முகக் குறிப்பான் உரைத்துக் காட்டி, ஓவச் செய்தியின் ஒன்று நினைந்து ஏற்றி = ஓவியம் வாளாது நிற்பது போல் நின்று நமக்கு உடன்படாமையை நினைந்து துணிந்து, பாவை மாய்த்த பனிநீர் நோக்கமொடு = தனது கண்ணின் பாவையை மறைத்து நிற்கும் நடுக்கத்தைச் செய்யும் நீரையுடைய பார்வையுடன், ஆகத்து ஒடுக்கிய புதல்வன் புல் தலை தூநீர் பயந்த துணை அமை பிணையல் மோயினள் உயிர்த்த காலை = தனது மார்பில் அடக்கிய புதல்வனது புல்லிய தலையிலுள்ள தூய நீர் தந்த இணைப்பூக்களால் தொடுத்த செங்கழுநீர் மாலையை மோந்து பெருமூச்சு எய்திய காலத்தே, மாமலர் மணி உரு இழந்த அணி அழி தோற்றம் கண்டு = அச்சிறந்த மலர் பவளம் போலும் உருவினை யிழந்த பொலிவற்ற காட்சியைக் கண்டு, கடிந்தனம் செலவே = போதலைத் தவிர்ந்தோ மன்றோ? ;

௨௬-௮. ஒண் தொடி உழையம் ஆகவும் இனைவோள் பிரிதும் நாம் எனினே பிழையலள் = ஒள்ளிய தொடியினளான இவள் நாம் அண்மையில் இருக்கவும் அவ்வாறு வருந்தும் இயல்பினள் பிரிவோமாயின் உயிர் உய்ந்திராள்; (ஆகலின் நாம் செல்லுமாறு எங்ஙனம்?)