பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97]

களிற்றியானை நிரை

௨௦௫/205


1'ஒருமை சுட்டிய' என்னுஞ் சூத்திரத்து, ' பன்மைக் காகு மிடனுமா ருண்டே' என்பது, ஒருமைச் சொல் பன்மைச் சொல்லோடு தொடர்தற்குப் பொருந்து மிடமு முண்டென்பதூஉம் பட நின்றமையால், 'அஃதை தந்தை . . . சோழர் ' என, ஒருமைச் சொல் பன்மைச் சொல்லோடு தொடர்தலுங் கண்டு கொள்க. ஈண்டு ஒருமைச் சொல் பன்மைச் சொல்லோடு மயங்குத லுடைமையான், 'ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவி' என்புழி அடங்காமை யறிக என்றனர் சேனாவரையர். அச் சூத்திரத்து, 'அஃதை தந்தை . . . சோழர் ' என்புழிச் சோழ ரெல்லாரும் அஃதைக்குத் தந்தையாம் முறையராய் நிற்றலின், 'தந்தை' என்னும் ஒருமை, சோழர் என்னும் பன்மையோடு தனித்தனி சென்று கூடுதலின் வழுவின்றேனும் ஈற்றுப் பன்மைபற்றி வழுவமைத்தார் என்றனர் நச்.



97. பாலை


[வற்புறுக்குந் தோழிக்குத் தலைமகள் சொல்லியது.]



கள்ளியங் காட்ட புள்ளியம் பொறிக்கலை
வறனுறல் அங்கோ டுதிர வலங்கடந்து
புலவுப்புலி துறந்த கலவுக்கழி கடுமுடை
இரவுக்குறும் பலற நூறி நிரைபகுத்
திருங்கல் முடுக்கர்த் திற்றி கெண்டும்

௫) கொலைவில் ஆடவர் போலப் 2பலவுடன்
பெருந்தலை யெருவையொடு பருந்துவந் திருக்கும்
அருஞ்சுரம் இறந்த கொடியோர்க் கல்கலும்
இருங்கழை இறும்பின் ஆய்ந்துகொண் டறுத்த
க0) நுணங்குகண் சிறுகோல் வணங்கிறை மகளிரொ

டகவுநர்ப் புரந்த அன்பின் கழல்தொடி
நறவுமகிழ் இருக்கை நன்னன் வேண்மான்
வயலை வேலி வியலூர் அன்னநின்
அலர்முலை யாகம் புலம்பப் பலநினைந்
கரு) தாழேல் என்றி தோழி யாழவென்

கண்பனி நிறுத்தல் எளிதோ குரவுமலர்ந்
தற்சிர நீங்கிய 3அரும்பத வேனில்
அறலவிர் வார்மணல் அகலியாற் றடைகரைத்
துறையணி 4மருது தொகல்கொள வோங்கிக்
உ௦) கலிழ்தளிர் அணிந்த இருஞ்சினை மாஅத்

திணர்ததை புதுப்பூ நிரைத்த பொங்கர்ப்
புகைபுரை அம்மஞ் சூர
நுகர்குயில் அகவும் குரல்கேட் போர்க்கே.

-5மாமூலனார்.

1. தொல், எச்சவியல், ௬௫, (பாடம்) 2. பல புலந்து. 3. அரும்பவிழ் வேளில். 4. மருதமொ டிகல்கொள, 5. ஒளவையார். குடவுழுந்தனார்.