உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

௨௦௬/206

அகநானூறு

[பாட்டு


(சொ - ள்.) கரு. தோழி -, க-க. கள்ளி அம் காட்ட புள்ளி அம் பொறிக் கலை - கள்ளிக் காட்டிலேயுள்ள புள்ளிகளாய பொறிகளை யுடைய கலைமானை, வறன் உறல் அம்கோடு உதிர வலங் கடந்து - அதன் வறட்சியுற்ற அழகிய கொம்பு சிதர்ந்தொழிய அதன் ஓட்டத்தினை வென்று பற்றித் தின்ற, புலவுப் புலி துறந்த கலவுக் கழி கடுமுடை - புலால் விருப்புடைய புலி கைவிட்டுப் போன மூட்டு வாய் ஒழிந்த கடிய முடைநாற்றத்தினை யுடைய தசை கிடக்குமிடத்தே,

௪-ச௬. இரவு குறும்பு அலற நூறி - இரவிலே காட்டரண்களி லுள்ளார் அலற அவர்களைக் கொன்று, நிரை பகுத்து - தாம் கொண்ட நிரைகளைப் பகுத்துக் கொண்டு, இருங் கல் முடுக்கர் - பெரிய கற்பாறையின் முடுக்கிலே. திற்றி கெண்டும் - தசையினை அறுத்துத் தின்னும், கொலை வில் ஆடவர்போல - கொலைத் தொழில் வல்ல வில்லினை யுடைய வெட்சி வீரர் போல,

௬-அ. பெருந்தலை எருவை யொடு பருந்து பல உடன் வந்திருக்கும் - பெரிய தலையினை யுடைய கழுகுகளோடு பருந்துகள் பலவும் ஒருங்கே வந்து சூழ்ந்திருக்கும், அருஞ் சுரம் இறந்த கொடி யோர்க்கு - அரிய சுரநெறியைக் கடந்து சென்ற கொடியோராய நம் தலைவரின் பிரிவிற்காக, அல்கலும் - நாடோறும்,

௯-கரு. இருங் கழை இறும்பின் - பெரிய மூங்கில்களையுடைய சிறு காட்டில், ஆய்ந்து கொண்டு அறுத்த - ஆராய்ந்து கொண்டு அறுத்திட்ட, நுணங்கு கண் சிறு கோல் - சிறிய கணுக்களை யுடைய நுண்ணிய கோலினைக் கொண்ட, வணங்கு இறை மகளிரொடு - வளைந்த முன் கையினையுடைய விறலியரொடு, அகவுநர் புரந்த அன்பின் - பாணர்களைப் புரந்திடும் அன்பினையும், கழல் தொடி நறவு மகிழ் இருக்கை - கழலும் தொடியினையும் கள்ளுண்டு மகிழும் இருக்கையினையுமுடைய, நன்னன் வேண்மான் - நன்னன் வேண்மானது, வயலை வேலி வியலூர் அன்ன - வயலைக் கொடி படர்ந்த வேலிகளை யுடைய வியலூரினை யொத்த, நின் அலர் முலை ஆகம் புலம்ப - நினது பரந்த முலையையுடைய மார்பகம் தனித்து வருந்த, பல நினைந்து ஆழேல் என்றி - பலவும் நினைந்து துன்பத்தில் ஆழ்ந்திடாதே என்னாநின்றாய் ; என் - இஃதென்னை !

க௬-உ௩. குரவு மலர்ந்து அற்சிரம் நீங்கிய அரும்பதவேனில் - குரவம் மலர்ந்து முன்பனிக்காலம் நீங்கப் பெற்ற அரிய செவ்வியை யுடைய இளவேனிற் காலத்தே, அறல் அவிர் வார் மணல் அகல் யாற்று அடைகரை - அறல் விளங்கும் நீண்ட மணலையுடைய அகன்ற ஆற்றின் கரையிடத்தே, துறை அணி மருது தொகல் கொள ஓங்கி - துறையை அழகு செய்யும் மருத மரங்களொடு தொகுதியாக உயர்ந்து, கலிழ்தளிர் அணிந்த இரும் சினை மா அத்து - அழகு ஒழுகும் தளிரைக் கொண்ட பெரிய கிளைகளையுடைய மாமரத்தின், இணர்ததை புதுப் பூ நிரைத்த பொங்கர் - கொத்துக்களாக நெருங்கிய புதிய பூக்கள் செறிந்த சோலைகளிலே, புகை புரை