பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

௨௨௨/222

அகநானூறு

[பாட்டு


என்னுஞ் சூத்திரத்து, இச் செய்யுளைக் காட்டி, இதனுள் வினை முடித்த காலைத் தேரிளையர் செலவிற்கேற்ப ஊராது கோலூன்றின் உல கிறந்தன செலவிற்குப் பற்றாத குதிரைத் தேரேறி இடைச்சுரத்தில் தங் காது மாலைக்காலத்து வந்து பூச்சூட்டினை, இனிது செய்தனை, எந்தை வாழிய, எனத் தோழி கூறியவாறு காண்க என்றும் உரைத்தனர் நச்.



105. பாலை


[மகட் போக்கிய தாய் சொல்லியது.]


அகலறை மலர்ந்த அரும்புமுதிர் வேங்கை .
ஒள்ளிலைத் தொடலை தைஇ மெல்லென
நல்வரை நாடன் தற்பா ராட்ட
யாங்குவல் லுநள்கொல் தானே தேம்பெய்து
ரு) மணிசெய் மண்டைத் தீம்பால் ஏந்தி

ஈனாத் தாயர் மடுப்பவும் உண்ணாள் -
நிழற்கயத் தன்ன நீள்நகர் வரைப்பின்
எம்முடைச் செல்வமும் உள்ளாள் பொய்ம்மருண்டு
பந்துபுடைப் பன்ன பாணிப் பல்லடிச்
க0) சில்பரிக் குதிரைப் பல்வேல் எழினி

கெடலருந் துப்பின் விடுதொழின் முடிமார்
கனையெரி நடந்த கல்காய் கானத்து
வினைவல் அம்பின் விழுத்தொடை மறவர்
தேம்பிழி நறுங்கள் மகிழின் முனைகடந்து
கரு) வீங்குமென் சுரைய ஏற்றினந் தரூஉம்

முகைதலை திறந்த வேனில்
பகைதலை மணந்த பல்லதர்ச் செலவே.

- தாயங்கண்ணனார்

(சொ - ள்.) ௪-அ. மணி செய் மண்டைத் தீம்பால் தேம் பெய்து ஏந்தி - மணிகளிழைத்த பொற்கலத்தில் இனிய பாலொடு தேன் கலந்து ஏந்தி, ஈனாத் தாயர் மடுப்பவும் உண்ணாள் - செவிலித் தாயர் ஊட்டவும் உண்ணாளாய என் மகள், நிழற் கயத்து அன்ன நீள் நகர் வரைப்பில் - நிழற்கண் ணுள்ள குளம்போலக் குளிர்ந்த நீண்ட மாளிகை யிடத்தேயுள்ள, எம் உடைச் செல்வமும் உள்ளாள் - எமது பெரிய செல்வத்தையும் நினையாளாய்,

க-௩. அகல் அறை மலர்ந்த அரும்பு முதிர் வேங்கை - அகன்ற பாறையில் அரும்பு முதிர்ந்து மலர்ந்த வேங்கையின், ஒள் இலைத் தொடலை தைஇ - ஒள்ளிய இலை விராவிய மாலையினை அணிந்து, மெல்லென - மெத்தென, நல்வரை நாடன் தன் பாராட்ட - நல்ல மலை நாடனாகிய தலைவன் தன்னைப் பாராட்டி வர,

அ. பொய் மருண்டு - அப் பொய்யை மெய்யென மயங்கி,