உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12]களிற்றியானை நிரை[௩௩

'துறையாயிற்று. மன் கழிவின்கண் வந்தது எனக் கொள்ளின் ஆற்றாது இரங்குதல் நிகழ்ந்ததாம். நச்சினார்க்கினிஇயர் இதனைப் 1பாலைக்கண் இரங்கல் நிகழ்ந்ததற்கு எடுத்துக் காட்டியவாறும் காண்க.

(மே - ள்.) 2'உரிப்பொரு ளல்லன மயங்கவும் பெறுமே' என்னும் சூத்திரவுரைக்கண், "வான மூர்ந்த. . . காட்டு' எனக் காடுறை யுலகத்துப் பாலை வந்தது" என்றும், 3'கொண்டுதலைக் கழியினும்' என்னும் சூத்திரவுரைக்கண், 'வானமூர்ந்த' என்னும் அகப்பாட்டினுள் 'மெய்புகு வன்ன. . .மன்னே' எனக் கூறி அழுதல் மேவாவாய்க் கண்ணும் துயிலுமென இரக்கம் மீக் கூறியவாறும் உணர்க' என்றும் உரைத்தனர் நச்.


12. குறிஞ்சி

[பகற்குறி வாராநின்ற தலைமகன் தோழியாற் செறிப்பறிவுறுக்கப்பட்டு, இரவுக் குறி வாரா வரைவல் என்றாற்கு அதுவும் மறுத்து வரைவு கடாயது.]


யாயே கண்ணினும் கடுங்கா தலளே
எந்தையும் நிலனுறப் பொறாஅன் சீறடிசிவப்ப
எவனில குறுமகள் இயங்குதி என்னும்
யாமை, பிரிவின் றியைந்த துவரா நட்பின்

௫)இருதலைப் புள்ளின் ஓருயி ரம்மே
ஏனலங் காவலர் ஆனா தார்த்தொறுங்
கிளிவிளி பயிற்றும் வெளிலாடு பெருஞ்சினை
விழுக்கோட் பலவின் பழுப்பயன் கொண்மார்
குறவர் ஊன்றிய குரம்பை புதைய

௧௦)வேங்கை தாஅய தேம்பாய் தோற்றம்
புலிசெத்து வெரீஇய புகர்முக வேழம்
மழைபடு சிலம்பிற் கழைபடப் பெயரும்
நல்வரை நாட நீவரின்
மெல்லியல் ஓருந் தான்வா ழலளே.

-கபிலர்.

(சொ - ள்.) ௧-௫. யாயே கண்ணினும் கடுங் காதலள் = எமது தாய் தன் கண்ணினும் இவள்பால் மிக்க காதலுடையாள், எந்தையும் நிலன் உறப் பொறாஅன் = எம் தந்தையும் (இவள் எங்கேனும் செல்வது காணின்) நிலத்தே இவள் அடி பொருந்தி நடக்கப் பொறாதவனாகி, இல குறுமகள் = ஏடி! இளைய மகளே! சீறடி சிவப்ப = நின் சிறிய அடி சிவப்புற, எவன் இயங்குதி என்னும் = என் செயச் செல்கின்றாய் என்று கூறும், யாமே = யாங்களும், பிரிவு இன்று இயைந்த துவரா நட்பின் = பிரிதலில்லாது கூடிய உவர்த்த


1. தொல். அகத். ௧௫. 2. தொல். அகத். ௧௩. 3. தொல். அகத். ௧௫.