உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

௯௦

அகநானூறு

[பாட்டு



கட்படர் ஓதி நிற்படர்ந் துள்ளி

கரு) அருஞ்செல வாற்றா ஆரிடை ஞெரேரெனப்
பரந்துபடு பாயல் நவ்வி பட்டென
இலங்குவளை செறியா இகுத்த நோக்கமொடு
நிலங்கிளை நினைவினை நின்ற நிற்கண் -
டின்னகை யினைய மாகவும் எம்வயின்

உ௦) ஊடல் யாங்குவந் தன்றென யாழநின்
கோடேந்து புருவமொடு குவவுநுதல் நீவி
நறுங்கதுப் புளரிய நன்ன ரமையத்து
வறுங்கை காட்டிய வாயல் கனவின்
ஏற்றேக் கற்ற உலமரல்

உரு) போற்றா யாகலின் புலத்தியால் எம்மே.

-- மதுரைச் செங்கண்ணனார்.


(சொ - ள்.) கச. கள் படர் ஓதி - வண்டு படியுங் கூந்தலையுடை யவளே !

கரு) ஒழித்தது பழித்த நெஞ்சமொடு - பெண்கட்குத் துயர் புரியலாகாது என்று முன்னோர் ஒழித்த கொள்கையைப் பழித்த உள்ளமோடு, வழிப் படர்ந்து - நெடுவழிச் சென்று, உள்ளியும் அறிதிரோ எம்மென - எம்மை நினைத்தும் அறிந்தீரோ என, நின் முள் எயிற்றுத் துவர்வாய் முறுவல் அழுங்க - நினது முட்போன்ற கூரிய பற்களையுடைய பவளம் போன்ற வாயின் நகை அழிய, நோய் முந்துறுத்து - நோயைத் தோற்றுவித்து, நொதுமல் மொழியல் - உண்மைக்குப் புறம்பான தொன்றை மொழியாதே, நின் ஆய் நலம் மறப்பெனோ மற்று - ஆராயப்படும் நினது அழகினை மறப்பேனோ மறந்திலேன்;

௫-க௩. சேண் இகந்து - நெடுந்தூரம் தாண்டி, ஒலி கழை பிசைந்த ஞெலி சொரி ஒண் பொறி - தழைத்த மூங்கில் ஒன்றோ டொன்று உரசித் தேய்வதால் அம் மூங்கில் சொரியும் ஒள்ளிய தீப் பொறி, படுஞெமல் புதையப் பொத்தி - மிக்க சருகுகள் மறையும்படி மூள, நெடு நிலை முளி புல் மீமிசை வளி சுழற்றுறாஅ - நெடிய இடத்துள்ள உலர்ந்த ஊகம் புல் மீது காற்றானது சுழற்றிப் பரவச் செய்ய, காடு கவர் பெருந் தீ ஓடுவயின் ஓடலின் - காட்டைக் கவரும் பெரிய தீயானது காற்றுச் சென்ற விடமெல்லாம் பரத்தலின், அதர் கெடுத்து அலறிய சாத்தொடு -நெறியினைக் கைவிட்டலறிய வாணிகச் சாத்தரொடு, ஓராங்கு - ஒரு பெற்றியே, மதர் புலி வெரீஇய மையல் வேழத்து இனம்- செருக்குற்ற புலியினைக் கண்டு அஞ்சிய மயக்கம் பொருந்திய யானைக் கூட்டம், தலைமயங்கிய நனந்தலைப் பெருங்காட்டு - பலவிடத்தும் திரிதலுற்ற அகன்ற இடத்தையுடைய பெரிய காட்டகத்தே, ஞான்று தோன்று அவிர் சுடர் மான்றாற் பட்டென -(மாலையில் மறையுங் காலத்துத்) தாழ்ந்து தோன்றும் ஞாயிறு மயங்கி மறைந்திட்டதாக,