பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க் கேசிகன் ☆ 21



மென்மையான கூந்தலின் மயிர்கள் சுருண்டு சுருண்டு விளங்குகின்றவர் மகளிர். அவர், பூண் கட்டுதலால் மாட்சிமைப் பட்ட உலக்கைகளை உயர்த்துத் தினை குற்றுவர். அப்போது, உரலின்கண் நின்றெழுகின்ற அவர்களின் உலக்கையொலியானது, நெடிய பெரிய மலைச்சாரலினின்றும் எழுகின்ற ஆந்தைகளின் ஒலியோடு கலந்து, ஒலியும் எதிரொலியும் போலே மாறிமாறி ஒலித்துக் கொண்டிருக்கும்.

குன்றுகளும் பிற்பட, அவற்றைக் கடந்து செல்கின்றோம்; தேரினை விரைவாகச் செலுத்துகின்றோம்; ஞாயிறானது மறைந்தபோதும், 'ஊர் தொலைவிலே யுள்ளதே எனக் கருதித் தேரினை நிறுத்தவும் எண்ணாது, ஏற்கெனவே விரைந்து செல்லும் குதிரைகளை, மேலும் விரையச் செல்லுமாறு, முடுக்கி ஒட்டுகின்றோம். இவ்வாறு மடிதல் இல்லாது வீடுநோக்கிப் போகின்றவர் யாம். எம்மினும் -

பல கட்டுக்களால் அமைந்த மாண்புடன் ஓங்கியது எமது நல்ல இல்லம். அதனிடத்து, ஒருபுறத்தே நிலையாக நின்று, நல்ல பக்கத்தே பல்லியானது ஒலிக்குந்தோறும் அதனைப் போற்றியவளாகக், கன்றுகள் வீடு திரும்புகின்ற மாலை வேளையிலே, எம் வரவுபார்த்து நிற்பவள் எம் தலைவி. நாணொடு செறிந்த கற்பினை உடையவள்; ஒளிருகின்ற நெற்றியினை உடையவள்; அழகியதான இனிய சொல்லினை உடையவள்; இளமைப் பருவத்தையும் உடையவள் அவள். அவளை அடைந்து, கைகளைக் கவித்துச் சென்று, அவளை நெருங்கி, அவள் கண்களைப் புதைத்து, பிடியானையின் துதிக்கை போன்ற அவளுடைய பின்னலிட்டுத் தொங்கும் கூந்தலைத் தீண்டி, அவளது தொடியணிந்த கைகள் பொருந்த, மென்மையான தோள்களை அடைவதற்கு விருப்பமுற்று, எமக்கு முன்னாகவே விரைந்துசென்ற எம் நெஞ்சமானது, அவளைத் தானும் சென்று தழுவியது கொல்லோ?

சொற்பொருள்: 3. அம்பென்றது, மெல்லிய முட்டை 4. செப்படர்-செப்புத் தகடு.S. துய்-பஞ்சு.புழல்-காணுதல்.7. ஆலி. பனிக்கட்டி, காலொடு காற்றாற் சிதறுண்டு. 8. கோடு - மேடு, இயவு - வழி. 1. கொடு நுண் ஒதி - வளைந்த பனிச்சை. ஒக்கிய - எடுத்த 14. உரந்துரந்து - வலியாற் செலுத்திய 16. துனைபரி விரைந்து செல்லும் குதிரை. துரத்தல் - முடுக்குதல் 22. பின்னகம் - பின்னின மயிர்.

விளக்கம்: தன் மனம் அவளை அடையத் துடிக்கும் நிலையைப் பாகனுக்கு அறிவிக்க விரும்புகின்றான் தலைவன்.தன் தேர் வேகமாகப் போவது அவனுக்கும் தெரியும். மேலும்,