பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

அகநானூறு -நித்திலக் கோவை


சென்றோர் மன்ற மான்றன்று பொழுது' என நின்திறத்து அவலம் விட இன்றிவண்
சேம்பின் எவனோ - பூக்கேழ் புலம்ப -
பசுமீன் நொடுத்த வெந்நெல் மாஅத்
தயிர்மிதி மிதவை ஆர்த்துவம் நினக்கே 15

வடவர் தந்த வான்கேழ் வட்டம்
குடபுல உறுப்பின் கூட்டுபு நிகழ்த்திய
வண்டிமிர் நறுஞ்சாந்து அணிகுவம் திண்திமில்
எல்லுத்தொழின் மடுத்த வல்வினைப் பரத்வர்

கூர்உளிக் கடுவிசை மாட்டலின் பாய்புடன்
20


கோட்சுறாக் கிழித்த கொடுமுடி நெடுவலை
தண்கடல் அசைவளி எறிதொறும் வினைவிட்டு
முன்றில் தாழைத் தூங்கும்
தெண்கடற் பரப்பினெம் உறைவின் ஊர்க்கே.

நெய்தற்பூக்கள் பொருந்தியிருக்கும் கடற்கரைக்கு உரிய தலைவனே!

பொன்னாற் செய்த பூண்களை உடையோனாகிய திரையன் என்பவன், என்றும் கெடாத நல்ல புகழினை உடையவன். பல்வேறு பூக்களையும் கொண்ட கானற்சோலையினிடத்து அவனுக்கு உரிய பவத்திரி என்னும் ஊராகும். அவ்வூரைப் போன்று நலன் நிரம்பியவள் எம் தலைவியாகிய இவள்.

'வழியிடையேயுள்ள கழிகள் ஒல்லென்னும் ஒலியுடனே நீர் பெருகப் பெற்றுள்ளன; கூரிய பற்களையுடைய பாம்பினோடு சுறாமீன்களும் திரியப்பெறுகின்றனவாயின; பொழுதும் ஒருதலையாக மயங்கிவிட்டது; இங்ஙனமாகவும் நம் தலைவர் சென்றனரே?’ என்று கூறியவளாக, நின் திறத்துத் துயரங் கொள்வாள் இவள். இதனால், இவளுடைய நல்லழகு வாய்ந்த இளமைச்செவ்வியும் நீங்கிப்போவதாகும். அது நேராது, இவள் துயர் நீங்கும்படியாக.

திண்மையான படகுகளுடன் பகலிற் கடற்மேற்சென்று மீன்பிடிக்கும் தொழிலினை மேற்கொண்டு வலிய செயலினைச் செய்பவர் பரதவர்கள்; அவர்கள் அங்ஙனம் சென்றக்கால்-

கடுமையான காற்றானது மிக்க விசையுடனே வந்து மோதுதலினாலும், கொலைத் தொழிலினை உடைய சுறாமீன்கள் ஒருங்கே பாய்ந்து கிழித்தலினாலும், வளைந்த முடிகளைக் கொண்ட நெடிதான சிதைவுற்ற வலைகள், குளிர்ந்த கடற்காற்று வீசுந்தோறும், மனைமுற்றங்களிலேயே தாழை