பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

152

அகநானூறு -நித்திலக் கோவை


சினவல் போகிய புன்கண் மாலை
அத்தம் நடுகல் ஆள்என உதைத்த

கான யானைக் கதுவாய் வள்ளுகிர்
5

இருப்பனை இதக்கையின் ஒடியும் ஆங்கண்
கடுங்கண் ஆடவர் ஏமுயல் கிடக்கை
வருநர் இன்மையின் களையுநர்க் காணா
என்றுழ் வெஞ்சுரம் தந்த நீயே

துயர்செய்து ஆற்றா யாகிப் பெயர்பாங்கு
10

உள்ளினை வாழிய நெஞ்சே வென்வேல்
மாவண் கழுவுள் காமூர் ஆங்கண்
பூதம் தந்த பொரியரை வேங்கைத்
தண்கமழ் புதுமலர் நாறும்

அஞ்சில் ஓதி ஆய்மடத் தகையே.
15

நெஞ்சமே வாழ்வாயாக!

அகற்சிவாய்ந்த வானத்தே இருள் மிகுதியாகப் பரவுமாறு, ஞாயிற்றினை ஆற்றுப்படுத்தி வைத்த பசுமையான தோற்றத்துடனே, சினத்தினால் மிகுதிபெற்ற துன்பத்தைச் செய்யும் மாலைக்காலத்திலே,

காட்டுவழியிலேயுள்ள நடப்பட்ட கல்லினை ஆள் என்று கருதி உதைத்த யானையின் சிரைவுற்ற வளமான நகமானது, பெரிய பனையினது நுங்கின் தோட்டினைப்போல ஒடியும். அத்தகைய இடத்திலே, வன்கண்மையினையுடைய ஆறலை கள்வரான ஆடவர் அம்பு எய்யும் முயற்சியோடு பதுங்கியிருப்பர்.வழி வருவார் இல்லாமையினாலே, தம் வறுமையினைக் களைபவரைக் காணாது வருத்தமுற்று வாடுவர். அத்தகைய வெப்பமிக்க கொடிய சுரநெறியிலே என்னை அழைத்து வந்தனை.

எனக்குத் துயரினைச் செய்து, அதனாலும் நீ ஆற்றமாட்டாதாய் ஆயினை வெற்றிவேலினையும் சிறந்த வன்மையினையும் உடைய கழுவுள் என்பானது காமூர் என்னுமிடத்திலே, பூதமானது தந்ததாய பொரிந்த அடி மரத்தினையுடைய வேங்கைமரத்தின், குளிர்ந்த மணத்துடன் கூடிய புதுமலர் போல நாறுகின்ற, அழகிய சிலவாகிய கூந்தலையுடைய நம் தலைவியின், அழகிய மடப்பமாகிய குணத்தினை, மீளவும் நீ நினைப்பாய் ஆயினையே!

சொற்பொருள்: 1. அகல்வாய் வானம் - அகற்சி வாய்ந்த வானம். ஆல்இருள் - மிக்க இருள். 2. பையென் தோற்றமொடு -