பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 157


செயிர் தீர் இன்றுணை’ என்றது, கலந்த காதற்கேண்மையினர் தம்முள் இன்புறத் தழுவுதலால் அடைகின்ற சிறந்த இன்பச் செவ்வியினைக் குறிப்பதாகும். அதனை அடையப்பெறாதான். வருந்துதலன்றி எங்ஙனம் தேறியிருக்க இயலும் என்பதனையும், இதனால் தோழிக்குத் தலைவி புலப்படுத்தினள் என்க.

368. வழி வழி பெருகியது!

பாடியவர்: மதுரை மருதனிளநாகனார். திணை: குறிஞ்சி, துறை: பகலிலே சிறைப்புறமாகத் தலைமகட்குச் சொல்லு வாளாய்த் தோழி சொல்லியது. சிறப்பு: கொங்கரின் உள்ளிவிழா.

(தலைவனும் தலைவியும் பகற்போதிலே தங்களுக்குள் சந்தித்து உறவாடி வருகின்ற காலம். தலைவனின் உள்ளம் தன் தலைவியின் கூட்டத்தை மட்டுமேதான் நாடித் திரிந்ததேயன்றி, அவளை முறையே மணந்துகூடி வாழ்வதில் செல்லவில்லை அவனுள்ளத்திலே அந்த எண்ணத்தை ஏற்படுத்துவாளாகத் தோழி தலைவியிடஞ் சொல்வது போன்று, தலைவனும் கேட்குமாறு சொல்லிய முறையிலே அமைந்தது இச்செய்யுள்.)

தொடுதோற் கானவன் சூடுறு வியன்புனம் கரிபுறம் கழிஇய பெரும்பாட்டு ஈரத்துத்
தொடுவளர் பைந்தினை நீடுகுரல் காக்கும்
ஒண்தொடி மகளிர்க்கு ஊசல் ஆக

ஆடுசினை ஒழித்த கோடுஇணர் களுலிய
5


குறும்பொறை அயலது நெடுந்தாள் வேங்கை
மடமயிற் குடுமியின் தோன்றும் நாடன்
உயர்வரை மருங்கின் காந்தளம் சோலைக்
குரங்குஅறி வாரா மரம்பயில் இறும்பிற்

கடிசுனைத் தெளிந்த மணிமருள் தீநீர்
10


பிடிபிணர் களிற்றினை எம்மொடு ஆடிப்
பல்நாள் உம்பர்ப் பெயர்ந்து சில்நாள்
கழியா மையே வழிவழிப் பெருகி
அம்பணை விளைந்த தேக்கட் டேறல்

வண்டுபடு கண்ணியர் மகிழும் சீறுர்
15


எவன்கொல் - வாழி, தோழி - கொங்கர்
மணியரை யாத்து மறுகின் ஆடும்
உள்ளி விழவின் அன்ன

அலர்ஆ கின்றது பலர்வாய் பட்டே?