பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

160

அகநானூறு -நித்திலக் கோவை


இன்றுநின் ஒலிகுரல் மண்ணல்' என்றதற்கு
எற்புலந்து அழிந்தன ளாகித் தற்றகக்
கடல்அம் தானைக் கைவண் சோழர்
கெடல்அரு நல்லிசை உறந்தை அன்ன

நிதியுடை நல்கர்ப் புதுவது புனைந்து
15

தமர்மணன் அயரவும் ஒல்லாள் கவர்முதல்
ஒமை நீடிய உலவை நீளிடை
மணியணி பலகை மாக்காழ் நெடுவேல்
துணிவுடை உள்ளமொடு துதைந்த முன்பின்

அறியாத் தேஎத்து அருஞ்சுரம் மடுத்த
20


சிறியோற்கு ஒத்தஎன் பெருமடத் தகுவி
சிறப்பும் சீரும் இன்றிச் சீறூர்
நல்கூர் பெண்டின் புல்வேய் குரம்பை
ஓர்ஆ யாத்த ஒருதூண் முன்றில்

ஏதில் வறுமனைச் சிலம்புடன் கழிஇ
25


மேயினள் கொல்?’ என நோவல் யானே.

கண்டாயோ, மகளே! அவளுடனே பொருந்தி ஒன்றுபட்டிருந்த என்னுடைய நிலைமையினையும் கண்டாயோ?

ஒள்ளிய வளையல்களைச் செறிந்த முன்கையினை உடைய மகளிர்கள், முறையாகக் கொண்டு பலவாறாகப் பாராட்டச், சிவந்த இரேகையினையுடைய கிளியும் இனிய பாலினை உண்ணாதாயிற்று. மயில்போன்ற சாயலையுடைய சிவந்த அணிகளணிந்த தோழியரின் கூட்டமும் விளையாடவாயின. பூச்செடிகளைக் கொண்டிருக்கும் தாழிகளும் மலர்கள் பலவாற்றால் அழகுபெற்றில, நிறம் பொருந்த முத்துவடம் முதலியன புனைந்து இயற்றிய அழகமைந்த வலிய சுவரின் கண் விளங்கும் பாவைகளும், பலி என ஏதும் பெறாவாயின. இவற்றைக் கண்டு, நோய் மென்மேலும் வருத்த, யானும் கலங்குவேன். அதன் மேலும்,

எண்ணமற்றவாளாகிய யான், கொடி போன்றவளாகிய என் மகள் எண்ணியதனை உணராதவளானேன். 'தொடி யணிந்தவளே! இன்று நின் தழைத்த கூந்தலைப் புனைவேன்' என்றதற்கு, என்னை வெறுத்து நெஞ்சம் அழிந்தவள் ஆயினள் அவள்!

தன்னுடைய தகுதிக்கு ஏற்பக் கடல் போன்ற தானையினையும் கைவண்மையினையும் உடைய சோழர்களது, அழிதலற்ற நல்ல புகழினையுடைய உறையூரைப் போன்ற செல்வ