பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

228

அகநானூறு - நித்திலக் கோவை


கானத்தைப் போலும் நறுமணத்தினைக் கமழ்வதாயும் விளங்கும் கூந்தலையும், நல்ல நெற்றியினையும் உடைய பெண்ணே!

கற்கள் விளங்கும் காட்டைச் சார்ந்தவிடத்தே, குந்தாலியினால் தோண்டிய குழியினிடத்தே, நெடிதுங் கீழேயாக ஊறிவரும் நீரினை உண்ட, இனிய தெளிந்த ஒலியினைக் கொண்ட மணிகளைப் பூண்ட பயன்மிகுந்த பெரிய ஆனிரையானது வறட்சியுற்ற பாலை நிலத்தே புகுந்ததாக

ஊது கொம்பினாலே. ஒலியெழுப்பி அவற்றை அவ்விடத்தினின்றும் அகற்றித் தளர்ந்த தன்மையினையுடைய கொன்றையின் குறைவுற்ற நிழலிலே தங்குவிப்பவர், பல ஆனினங்களை உடையவரான ஆயர்கள்.

அவர்கள் அறியாது ஊதும், சிறிதான மூங்கிலாற் செய்யப் பெற்ற குழலானது தனிமைகொண்ட தெளிவான ஒலியினை எழுப்பும், அதனைக் குற்றமற்ற பளிங்கினைப் போன்ற தோற்றத்தையுடைய பலவாகக் காய்த்திருக்கும் நெல்லியின் பசுமையான காய்களை அருந்தி அசையிட்டுக் கொண்டிருக்கின்ற இளைய மரைமான்கள், கூர்ந்து கேட்கும்.

அத்தகைய தன்மையுடைய காட்டிலே, காயும் ஞாயிறு கடுமையுடன் எரித்தலால் அழகொழிந்த பாறைகளையும், மூங்கிலின் கணுக்கள் உடைந்த சிகரங்களையும், இடமகன்ற பக்கங்களையும் உடைய மலையினைக் கடந்து சென்றவர் நம் தலைவர். அவர்

இனிமை அமைதலையுடைய நின் மார்பினைப் பருகுதல் போன்ற காதல் கொண்ட உள்ளத்துடனே பிணைந்து தழுவுதலை இல்லாதவராகத், தாம் சென்ற அவ்விடத்தேயே காலத்தை நீட்டித்திருப்பவர் அல்லர்.

சொற்பொருள்: 1.சிமையம்-தலையின் உச்சிக் கொண்டை சாந்து-மயிர்ச் சாந்து 3.இன் உறல் ஆகம்-இனிமை அமைதலை யுடைய மார்பகம். 5. திருகுபு முயங்கல்-பிணைந்து தழுவுதல். 5. கடற்று அடை மருங்கு-காடு சார்ந்த பக்கம். கணிச்சி-குந்தாலி, 7.உடைக் கண்-உடைத்து ஆக்கிய குழி, 9. கோடு-ஊதுகொம்பு. துவைத்தல்-ஒலித்தல். 11.கல்லாது-இசை நெறியினைக் கற்றிராது. 12.வெதிர்ந்த தீங்குழல்-மூங்கிலாற் செய்த இனிய புல்லாங்குழல். 15:மெல்கிடல்-அசையிடல் 16. கடுகிய-கடுமையாகத் தாக்கிய 18. வாய்படு மருங்கு இடமகன்ற பக்கமலை.

விளக்கம் : ஒருவரையொருவர் பின்னிப் பிணைந்து தழுவிக் கிடக்கின்ற காதலுடையவர்க்கே உரித்தான, அந்த ஒப்பற்ற இன்ப நிலையினையே, ‘பருகு வன்ன காதல் உள்ளமொடு ஆகம்