பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

230

அகநானூறு - நித்திலக் கோவை



கால்கண்ட டன்ன வழிபடப் போகி
அயிர்ச்சேற்று அள்ளல் அழுவத்து ஆங்கண்
இருள்நீர் இட்டுச்சுரம் நீந்தித் துறைகெழு
மெல்லம் புலம்பன் வந்த ஞான்றை

பூமலி இருங்கழித் துயல்வரும் அடையோடு
20

நேமி தந்த நெடுநீர் நெய்தல்
விளையா இளங்கள் நாறப் பலவுடன்
பொதிஅவிழ் தண்மலர் கண்டும் நன்றும்
புதுவது ஆகின்று அம்ம-பழவிறல்

பாடுஎழுந்து இரங்கும் முந்நீர்
25

நீடிரும் பெண்ணை நம் அழுங்கல் ஊரே!

தோழி! இல்லத்தினைக் கடந்து சென்று சற்றே தங்கினாலும் அலராகும் என்ற நிலையிலும், அவனுடனே விருப்புற்றுக் கானற்சோலையிலே தங்கிய நம் களவு ஒழுக்கம் நீங்குமாறு, பல தன்மைகளும் புரிந்து இயற்றலுற்ற நல்வினையின் பயனும் வந்து வாய்ப்பதாயிற்று.

அசுவ சாத்திரம் கூறும் இலக்கணம் அமைந்த பிறப்பினையும், நீலமணியாகிய நெற்றிச் சுட்டியினையும், கொய்யப் பெற்ற மயிர்பொருந்திய பிடரியினையும், உடையவும், நெய்பெய்து மிதித்து ஆக்கிய கவளத்தை வெறுத்துக் கொழுமையான சோற்றை உண்ணுதலையுடையவும், வரிசையாகப் பொருந்தி ஒன்றுபட்டுச் செல்லுதலையுடையவும், செவ்விய தினைக்கதிர் நீண்டு வளைந்தாற்போன்ற வளைந்த தலையினை உடையவும் ஆகிய, நன்றான நான்கு குதிரைகளைத், தாங்கும் நுகமானது பருத்த திமிலிலே பொருந்தியதாகப் பொருந்தியிருக்க, அழகிய பொறிகளையுடைய பலவடங்கள் ஒலிக்குமாறு பூட்டி, தேர் செலுத்தும் அறிவுடைய பாகன் தேரினைச் செலுத்தலினாலே -

தாழ்வான துறையிடத்தே நீர் பாய்ந்துசென்றாலொத்த, திண்மையான தேரிற் பூட்டிய தாவிச்செல்லும் குதிரைகளின் அம்பு பாய்ந்தாற்போன்று விரையச் செல்லும் வலிய கால்களின் செலவு, பாலைக் கண்டாற்போல விளங்கும் காற்றால் திரட்டப்பெற்றுக் கிடக்கும் வெண்மணலிடத்தே, வாய்க்காலைக் கண்டாற்போல வழிபடுமாறு சென்று, நுண்ணிய சேற்றுக் குழம்பின் பரப்பினையுடைய அவ்விடத்து, இருண்ட தன்மையினையுடைய குறுகிய சுரத்தையும் கடந்து, துறைபொருந்திய கடற்கரையினையுடைய நம் தலைவனும் வந்தனன்.