பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 23



          தண்பெரும் படாஅர் வெரூஉம்
          குன்றுவிலங் கியவினவர் சென்ற நாட்டே?

வெற்றி வாளினாலே வெட்டிக் கொன்றும், வில்வினைத் தொழிலினாலே அடித்து வெருட்டியும், பசுமந்தைகளைக் கைகொண்ட அஞ்சாமையாளரான மறவர்கள், அம்புகளைத் தொலைவுக்குச் செல்லுமாறு செலுத்தி நிரைகாவலரை ஒட்டியபின், வன்மையான காட்டு நிலத்தை அடைந்தனர். அடைந்தாராக -

தெய்வம் குடிகொண்டிருக்கும் பருத்த அடியினையுடைய வேம்பிற்குக் கொழுத்த ஒரு பசுவினைக் கொன்று பலியிட்டனர். அதன்குருதியைத் தூவித் தெய்வத்தைப் போற்றி வழிபட்டனர். பின், அப்பசுவின் புலாலினைப் புழுக்கி உண்டு விட்டுச் சென்றனர். அவ்வாறு அவர் உண்டுவிட்டுச் சென்றிருந்த அகன்ற பாறையிடத்தே, களிறு தன் முதுகினை உராய்ந்த கருத்த அடிமரத்தையுடைய இலவமரத்தின் வெண்பஞ்சுடன் கூடிய விதைகள், பனிபெய்வதுபோல் வீழ்ந்து கொண்டிருக்கும்.

அத்தகைய காட்டுவழி மிகவும் நெடியதெனவும் அவர் அஞ்சார். பெரிதான குதிரைப் படையினையுடைய, நல்ல போராற்றல், மிக்க, வானவனின் கழல் விளங்கும் திருத்தமான செவ்விய பாதங்களை அடையும் விருப்பத்தினாலே செல்லுகின்ற இயல்புடையவர்கள் கூத்தர்கள். அவர்களைப் போலவே -

கதிரவன் எரிக்கும் பகற்பொழுதிலே, மூங்கிலின் விளைந்த கழைகளும் உடைந்துபோகின்ற வேகத்துடனே வந்து தாக்கும் கவண்கல்லின் இடிக்கு அஞ்சிச் செல்லுதலன்றி, இரவு வேளையிலே சென்று, தினைப்புனத்தினை மேய்ந்த வலிய சினமிக்க வேழமானது. குளிர்ந்த பெரிதானதுற்றினுக்கு அஞ்சிக் கலங்கும் தன்மையினையுடையதும், குன்றுகள் குறுக்கிடும் நெறிகளையுடையதுமான, நம் தலைவரான அவர் சென்ற நாட்டினுக்கு, நாமும் இனிச் சென்றால் என்னவோ?

சொற்பொருள் : 1. வயவாள் - வெற்றிவாள்; வாளை ஏந்தியவனின் ஆற்றல் அவன் ஏந்திய வாளின்மேல் ஏற்றிக் கூறப்பெற்றது.நீக்கி-போக்கி கொன்று.2.ப்யநிரை பசுமந்தை பயம் - பால்.தழிஇய-கைப்பற்றிய கடுங்கண்- அஞ்சாமை, மறவர் - பாலை நிலத்து மக்கள், ம்ழவர் எனவும் பாடம். 5. கொழுப்பா - கொழுத்த ஆ 6.புலவுப்புழுக்கு புழுக்கிய புலால் அறை பாறை. 9. கோடியர் - கூத்தர். 10. வானவன் - சேரன் 12. காம்பு - மூங்கில். 13. விளை கழை முற்றிய மூங்கில் தண்டு, வனை கழை எனவும்