பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 31


          பிணித்தோர் சென்ற ஆறுநினைந்து அல்கலும்
          குளித்துப்பொரு கயலிற் கண்பனி மல்க
          ஐய வாக வெய்ய வுயிரா 5

          இரவும் எல்லையும் படரட வருந்தி
          அரவுதுங்கு மதியின் துதலொளி கரப்பத்
          தம்மல தில்லா நம்மிவண் ஒழியப்
          பொருள்புரிந்து அகன்றன ராயினும் அருள்புரிந்து
          வருவர் - வாழி, தோழி! - பெரிய 1O

          நிதியஞ் சொரிந்த நீவி போலப்
          பாம்பூன் தேம்பும் வறங்கூர் கடத்திடை
          நீங்கா வம்பலர் கணையிடத் தொலைந்தோர்
          வசிபடு புண்ணின் குருதி மாந்தி
          ஒற்றுச்செல் மாக்களின் ஒடுங்கிய குரல 15
          
          இல்வரிப் படுஉக் காக்கைப்
          கல்லுயர் பிறங்கல் மலைஇறந் தோரே.

'தோழி! நீ வாழ்வாயாக!

இனிப் பிறிதொரு இன்பமும் யாதாயினும் உளதோ? இதுவும் பிரிவினால் தடைப்படுமோ? என அஞ்சுதலை விட்டு விடுவாயாக’ என்று கூறினார். உடலுக்கு அழகாயமைந்த நம் கவின் வளர்ந்து பெருகுமாறு நம்மைத் தழுவினார். நம் நெஞ்சத்தினை அவரிடத்தேயாகப் பிணித்துக் கொண்டவரும் ஆயினார். அத்தகையரான நம் தலைவர்

நம்மைப் பிரிந்து சென்றிருக்கும் நெறியினை நாடோறும் நினைந்து, நீரிடத்தே மூழ்கிப் பொருதும் கெண்டைமீன்களைப் போலக், கண்களிடத்தே துன்பம் பெருகிக் கலக்கமுற, மென்மையாகச் சுடுமூச்சு உயிர்த்து, இரவும் பகலும் துன்பம் தாக்குதலால் வருந்திப், பாம்பு விழுங்கிய மதியினைப் போல நெற்றியும் ஒளியிழந்து போகத் தம்மையன்றி வேறு புகலில்லாத நாம் இவ்விடத்தே தனித்திருந்து நலியுமாறு விட்டு விட்டுப், பொருளை விரும்பியவராகப் பிரிந்து சென்றனர். ஆயினும்.

மிகுதியான நிதியத்தினைச் சொரிந்தபின் கிடக்கும் துணிப்பையினைப் போலப், பாம்புகளும் ஊன்வற்றி உலர்ந்து கிடக்கும் வறட்சிமிகுந்த பாலைவழியிடையே, ஆறலை கள்வர்கள் அம்பினை எய்ய, அதனால் செத்து வீழ்ந்தோரான ஒழியாத புதிய வழிப்போக்கரது பிளவுபட்ட புண்ணினின்றும் வழியும் குருதியினை மிகவும் உண்ட காக்கைகள், ஒற்றராகச் செல்லும் மாக்களின் ஒடுக்கமான குரலினை உடையவாய், தம்