பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

அகநானூறு - நித்திலக் கோவை



          குரூஉக்கொடிப் பகன்றை சூடி மூதூர்ப்
          போர்ச்செறி மள்ளரிற் புகுதரும் ஊரன்
          தேர்தர வந்த தெரிஇழை நெகிழ்தோள்
          ஊர்கொள் கல்லா மகளிர் தரத்தரப்
          பரத்தைமை தாங்கலோ இலனென வறிதுநீ 10

          புலத்தல் ஒல்லுமோ? - மனைகெழு மடந்தை
          அதுபுலந்து உறைதல் வல்லி யோரே
          செய்யோள் நீங்கச் சில்பதங் கொழித்துத்
          தாமட்டு உண்டு தமியர் ஆகித்
          தேமொழிப் புதல்வர் திரங்குமுலை சுவைப்ப 15

          வைகுநர் ஆகுதல் அறிந்தும்
          அறியார் அம்மவஃது உடலு மோரே!

துறையிடத்தே மீன்கள் உலவிக்கொண்டிருக்கும் மிக்க நீரினை உடைய பொய்கை ஒன்று; அதன்கண் விளங்கும் ஆம்பல்

மலரை மேய்ந்தது, நெறித்த கொம்புகளையும் மிக்க குளிச்சியுற்ற

முதுகினையுமுடைய முதுமையுற்ற எருமைக் கடா ஒன்று: உண்டபின், மிகுதியாகச் சேறுபட்டுக் கிடந்த இடத்திலே இரவெல்லாம் கிடந்து அது உறங்கியது. காலையில், பசிய நிணத்தினைக் கொண்ட வரால்மீன்கள் தன் கால் களுக்கிடையே மிதிபட்டு அழியுமாறு அது அச்சேற்றினின்றும் வெளிப்பட்டது. வெள்ளிய பூக்களையுடைய பகன்றைக் கொடியினைத் தன் தலையிற் சூடிக்கொண்டதாக, அது பழைமையினையுடைய ஊரின் கண்ணும் புகுந்தது.அந்தக் காட்சி போரிலே வெற்றிபெற்று வாகைசூடி வருகின்ற வீரர்கள் வருவதுபோன்று செருக்குடன் இருந்தது. அத்தகைய ஊரினையுடையவன் நம் தலைவன்.

'தன் தேரிற் பாகன் ஏற்றிக்கொண்டு தருதலால் வந்தடைந்த, விளங்கும் அணிகள் நெகிழ்ந்த தோள்களையுடைய ஊர் ஏற்றுக்கொள்ளும் முறைமையினைக் கல்லாத மகளிரான பரத்தையர்கள் பரத்தமையினை மென்மேலும் தந்து கொண்டிருக்கத் தாங்கலாற்றாதவனாக உள்ளனனே?’ என்று? மனைக்குப் பொருந்திய கற்புடைய மடந்தையான நீ, பயனின்றி இவனோடு ஊடியிருத்தல் நினக்குப் பொருந்துவதாகுமோ?

அங்ஙனம் தலைவனின் பரத்தமைக்காக அவனுடனே ஊடிக்கொண்டு வாழ்தற்கு வன்மையுடைய மகளிர், தம்மிடத்து நின்றும் திருமகள் நீங்கிப்போகச், சிறிதளவான அரிசியைப் புடைத்துத் தாமே சமைத்து உண்டு தனித்திருப்போர் ஆகித், தேன் போன்று இனிக்குஞ் சொல்லினரான புதல்வர் பாலற்றுச்