பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

அகநானூறு -நித்திலக் கோவை


நுமக்கு, நீர் நாடிச் செல்லும் அரிதான பொருளும் வந்தடைவதாக கொய்த குழையாகிய தளிரின் அழகினைப் போன்ற தாங்குதற்கற்ற வலியினையுடையவளும், மென்மைத் தன்மையினளும், இளமைப் பருவத்தினளும், நும்மிடத்து மிக்க பேரன்பினளுமாகிய இவள், ‘யாம் பிரிந்து போவோம்’ என்று கூறும் நுமக்கு எதிரே. 'பிரிந்திருப்போம்’ என்று கூறுகின்ற அறிவுடைமையினை இல்லாதவளாயிற்றே! யான்றான் என் செய்வேனோ?

சொற்பொருள்: 1. கிளை-இனம்; கூட்டம். 3. குறும்பு - சிற்றரண். 1. சூழின் கருதின் 13. மதுகை - வலிமை 16. ஒழிவேம் ஒழியோம் எனவும் பாடம்.

விளக்கம் : காட்டின் கடத்தற்கரிய கொடுமையினையும், தலைவியின் மிகுந்த அழகினையும், அவளின் பேரன்பினையும், பிரிந்தால் அவள் படும் வாட்ட மிகுதியையும் கூறி, அவளது பேதைமையினையம் உணர்த்திச், செலவு அழுங்குவிக்கும் நயத்தினை அறிந்து இன்புறுக.

320. சூளும் பொய்யோ?

பாடியவர்: மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச்சாத்தனார். திணை: நெய்தல், துறை: பகற்குறிக்கண் வந்த தலைமகனைத் தோழி வரைவுகடாயது.

(கடற்றுறைப் பகுதித் தலைவன் ஒருவன், நங்கை யொருத்தியைக் கண்டு காதலித்துக் களவிற் கூடியும் வருகின்றான். பகற்போதில் வருதலையுடைய அவனைத் தோழி கண்டு, தலைவியை வரைந்துவந்து மணந்து கொள்ளுமாறு கூறியமுறையிலே அமைந்தது இச்செய்யுள்.)

ஓங்குதிரைப் பரப்பின் வாங்குவிசைக் கொளீஇத்
திமிலோன் தந்த கடுங்கண் வயமீன்
தழைஅணி அல்குல் செல்வத் தங்கையர்
விழவுஅயர் மறுகின் விலைஎனப் பகரும்

கானல்அம் சிறுகுடிப் பெருநீர்ச் சேர்ப்ப!
5

மலர்ஏர் உண்கண்எம் தோழி எவ்வம்
அலர்வாய் நீங்கநீ அருளாய் பொய்ப்பினும்
நெடுங்கழி துழைஇய குறுங்கால் அன்னம்
அடும்புஅமர் எக்கர் அம்சிறை உளரும்

தடவுநிலைப் புன்னைத் தாதுஅணி பெருந்துறை
1O