பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

அகநானூறு -நித்திலக் கோவை


ஒடிக்கொண்டிருக்கும், மரங்களடர்ந்த காட்டிலே, பிறைபோன்ற வெள்ளிய வளைந்த கொம்பினையுடைய அச்சமற்ற பன்றியினது இறைச்சித் துண்டுகளைத் தின்ற, வளைந்த கோடுகளையுடைய புலியானது முழங்கிக்கொண்டிருக்கும் மலைச்சாரலை உடையது அவனது பொதியில் மலை, உச்சிப் பாறைகளிடத்தே பொருந்திய இனிதான தேனடைகளை அறுத்தெடுக்க முயலுகின்ற குறவர்களும் ஏறிச்சென்று அறியாத, ஏறுதற்கரிய உயர்ந்த மலை முடிகளையும் உடையது அம்மலை புகுதற்கு அரியதும், திதியனுக்கு உரியதுமான அப்பொதியில் மலையினைப்போலப் பெறுதற்கு அருமையானவள் நம் காதலியாகிய அவள் அதனை அறியாதே-

விளங்கும் கதிரவனும் மறையும்படியாகப் பகலிற் பரந்தனவாயமேகங்கள், இரவில் மின்னலிட்டுப் பிளந்தவையாக, மிகுதியான மழையினைப் பொழிந்த நள்ளிரவு வேளையிலே, ஆராத காமநோயானது வருத்தாநின்று அலைக்கழிப்ப, மலை முகட்டினின்றும் வீழ்ந்திறக்கும் மனத்துயரினைக் கொண்டவரே போலவும், அச்சமுண்டாக நடுக்கமுற்றுப் பாம்பினை அடித்த கோலினைப்போலவும், தனித்துக் கிடந்து நீயும் வாடுவையோ? சொற்பொருள்: 1. வயங்கு வெயில் - ஒளி விளங்கும் கதிரவன். ஞெமிய மறைய, பாஅய் - பரவி வசிபு - பிளத்தல்; மேகங்களை ஊடறுத்து எழும் மின்னலை மின்னு வசிபு என்றனர். 2. மயங்குதுளி -மிக்கமழை அடைமழை, பானாட்கங்குல் - இரவின் பாதிநாளாகிய நள்ளிருள் பொழுது. 3. அடுஉ - வருத்துவதாய். 4 தெறுவர - அச்சமுண்டாக, தேம்புதல் - வாடிக் கலுழ்தல், 7. கண்கூடிய - திரண்டுநிறைந்த ஞாட்பு - போர் 9. இறும்பு- காடு.10. கடுங்கண் - தறுகண்மை.11. குறை-இறைச்சித் துண்டு. கொடுவரி - வளைவான கோடுகளையுடைய புலிகள். 12. அறை - பாறை. 13. ஏற்றரு - ஏறுதற்கு அரிய,

விளக்கம்: நெஞ்சத்தின் தேம்புதலுக்கு வயங்குவெயில் ஞெமியப் பாஅய், மின்னு வசிபு மயங்குதுளி பொழிந்த பானாட்கங்குல், ஆராக் காமம் அடுஉநின் றலைப்ப, இறுவரை வீழ்நரின் நடுங்கித், தெறுவரப் பாம்பெறி கோலின் தமியைவைகி' என்று கூறி, அதன் மிகுதியை விளக்கினர். பலநாட்கைக்குத் துணையாயிருந்த கோலினைப் பாம்பினை அடித்ததும் வீசி எறிந்து கழித்துவிட, அது அவர் உறவினை விட்டுத் தனித்துக் கிடப்பதுபோல, நீயும் அவளைக் கண்டு உறவாடிய வகையெல்லாம் இழந்தனையாய், இன்று தனித்துத் தனிமை பொறாமல் வருந்துகின்றனையோ? என்பான், 'பாம்பெறி கோலில் தமியை வைகி' என்றனன், பாம்படித்த