பக்கம்:அகமும் புறமும்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32 • அகமும் புறமும்

விட்டது. அகங்காரம் அழியத் தொடங்கவே, அன்பு வளரத் தொடங்குகிறது. தன்னைப் பற்றி மட்டும் அன்பு கொண்டிருந்த தலைவனுக்குத் தன்னையல்லாத பிறரிடமும் அன்பு செய்யும் வாய்ப்பைத் தேடித்தந்தது குடும்பமே யன்றோ?

அன்பின் விரிவு

தலைவியினிடம் சென்ற அன்பு, பின்னர் அவளுடைய உயிர்த்தோழி, தாயார், சுற்றத்தார் எனப் பலரிடத்தும் பரவுகின்றது. இதனையடுத்துத் தனக்குப் பிறக்கும் குழந்தைகளிடம் அன்பு விரிகின்றது. இந்த அளவுவரைத் தலைவனுடைய அன்பு விரிந்து அகங்காரம் குறைந்தது உண்மைதான். ஆனாலும், பிறருக்காகத் தன்னலத்தை முழுவதும் விட்டுக் கொடுக்கும் சந்தருப்பம் இன்னும் ஏற்படவில்லை. எனினும், குடும்பத் தலைவன் ஆனவுடன் புதிய கடமைகள் தோன்றுகின்றன. அவனுக்கு!

தான் குடும்பம் வைத்தது தன்னுடைய இடையறா இன்பத்தின் பொருட்டே என்று நினைத்தான் தலைவன்; ஆனால், இப்புதிய கடமைகள் தன்னுடைய இன்பத்திற்கு இடையூறாய் நிற்றலைக் கண்டான். ஒரு பெரிய போராட்டம் நிகழ்கின்றது. அவன் ஓயாது வேண்டி நிற்கும் இன்பத்திற்கும் அவனைப் பிடித்து உந்தும் கடமைக்கும் இடையே பெரும்போராட்டம் நிகழ்கிறது. கடமையை நிறைவேற்ற வேண்டுமாயின், அருமைக் காதலியைப் பிரிந்து செல்ல வேண்டிய கடப்பாடு ஏற்படுகிறது. என்ன செய்வான் தலைவன்! பலநாள் அதுபற்றிச் சிந்திக்கின்றான். இறுதியாகக் கடமை உணர்வே எஞ்சுகின்றது. இல்லறம் நடத்துவதன் பயன் இத்தகைய கடமைகளை நிறைவேற்றுவதே என்பதை அறிகின்றான். மேலும், இக்கடமைகளை நிறைவேற்றுவதில் அவன் புதியதோர் இன்பத்தைக் காண்கிறான். தலைவியுடன் உறைவதே இன்பம் என்று