பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

105


13. ஒரு குறிப்பிட்ட நேரத்தில், கடந்து முடிக்கப் படுகிற தூரமுள்ள ஓட்டங்களில் 'இடங்கள் முடிவெடுக்கப் படுகிற போது, அந்த ஓட்டப் போட்டி முடிவடையப் போகிறது என்பதைப் போட்டியாளர்களுக்கும் நடுவர்களுக்கும் அறிவிப்பதற்காக சரியாக 1 நிமிடத்திற்கு முன்னதாக துப்பாக்கி ஒலி மூலம் வெளிப்படுத்திக் காட்டுவார்.

ஓட்டம் முடியப்போகிறது என்று துப்பாக்கி ஒலி மூலம் அறிவித்த பிறகு, அந்த ஒலி எழுப்பிய நேரத்தில் அல்லது பின்னால், ஒட்டக்காரர்கள் எந்தெந்த இடத்தில் ஓடிக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை அதற்காக நியமிக்கப்பட்டிருக்கும் நடுவர்கள், துணை நடுவர்கள் கண்டுபிடித்துக் குறித்துக் கொள்ள வேண்டும்.

முடிவெல்லைக் கோட்டின் உட்புற எல்லையை எப்பொழுது ஒட்டக்காரர்கள் கடைசி தப்படி இட்டுக் கடந்து முடிக்கின்றார்கள் என்பதைத் தீர்மானமாகத் தெரிந்து கொண்டு முடிவெடுக்க வேண்டும். இவ்வாறு ஓடிய தூரத்தையும் நேரத்தையும் தெளிவாகத் தெரிந்து கொள்வதற்காக, ஓட்டம் ஆரம்பிக்கும் முன்னரே, ஒவ்வொரு ஒட்டக்காராருக்கும் ஒவ்வொரு துணை நடுவர் என்று நியமித்து விட வேண்டும்.

குறிப்பு: ஓடவிடுபவர், திருப்பி அழைப்பவர்கள், ஒட விடுபவரின் உதவியாளர்கள் ஆகியோரது கடமைகளை 121, 122ம் விதிகளில் கூறியிருப்பதைக் காண்க.