பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



124

அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்


குறுந்தடியை மாற்றிக்கொள்வது என்பது தடியைக் கொடுப்பவர் கையிலிருந்து பெறுபவர் கையில் வந்ததும் முடிவு பெறுகிறது. குறுந்தடியை மாற்றிக்கொள்வதானது அந்த மாற்றுப் பகுதிக்கு உள்ளே தான் நடைபெற வேண்டும். அந்த எல்லைக்கோட்டை பெறுபவரது கையோ, கால்களோ, உடம்போ கடந்துவிடுகிறபோது மாற்றம் நிகழ்ந்தால், அது தவறான மாற்றலாகிவிடும்.

குறுந்தடியின் அமைப்பு : குறுந்தடியானது நீண்ட வடிவம் உள்ளது. உள்ளே குழி போன்ற வெற்றிடம் கொண்டு, வட்ட வடிவமான வாயை உடையது. அது மரத்தால் அல்லது உலோகத்தால் ஆனதாகவும், உறுதி வாய்ந்ததாகவும் அமைந்திருக்கவேண்டும். ஒரே துண்டால் ஆன அந்தக் குறுந்தடியின் நீளம் 300 மில்லி மீட்டருக்கு மிகாமலும், 280 மில்லி மீட்டருக்கு குறையாமலும் அமைந்திருக்க வேண்டும்.

ஒரு குறுந் தடியின் சுற்றளவு 120 மில்லி மீட்டரிலிருந்து 130 மில்லி மீட்டருக்குள்ளாக இருப்பதுடன், எடையானது 50 கிராம்களுக்குக் குறையாமலும் இருக்க வேண்டும்.

குறிப்பு: குறுந்தடிகள் வண்ணப் பூச்சுடன் அமையப்பெற்றிருந்தால், ஒட்ட நேரத்தில் தெளிவாகத் தெரியும்.

5. ஒவ்வொரு அணியும் எந்தெந்த ஒட்டப் பாதையிலிருந்து ஓடவேண்டும் என்பது, சீட்டெடுப்பின் மூலம் முடிவு செய்யப்படவேண்டும். தொடக்க ஒட்டக்காரர்களைத் தவிர, மற்ற ஒட்டக்காரர்கள் எந்தெந்த குறுந்தடி மாற்றும்