பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15. ஓடி வரும் பாதையின் பக்கவாட்டில் போட்டியாளர்கள் எந்தவித அடையாளப் பொருளையும் (Marks) வைத்துக் கொள்ளக்கூடாது. போட்டி அமைப்பாளர்கள் அப்படிப் பொருள் தந்தால், அதனை வாங்கி வைத்துக் கொள்ள அனுமதி உண்டு. போட்டி நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டதற்குப் பின்னர், போட்டியாளர்கள் ஓடிவரும் பாதையினைப் பயிற்சிக்காகப் பழகிப் பார்க்கப் பயன்படுத்திடக் கூடாது. 16. உயரத் தாண்டுவதற்காக கோலை ஊன்றி எழும்புவதற்காக, நல்ல உறுதியான பொருளால் அமைந்த போட்டி ஒன்று, தரையின் சம அளவாகப் புதைக்கப்பட்டிருக்கும். 17. தாண்டி விழும் பரப்பளவானது 5 மீட்டர் x 5 மீட்டர் அளவுக்குக் குறையாமல் அமைந்திட வேண்டும். (Apparatus): 18. உயரக் கம்பங்கள் : எந்த விதமான பொருட்களினாலும் உயரக் கம்பங்கள் உருவாக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அவை உறுதியானவைகளாக இருக்க வேண்டும். நிறுத்தி வைக்கபபட்டிருக்கும் இரண்டு கம்பங்களுக்கு இடையேயுள்ள தூரம் அல்லது இரண்டு கம்பங்களையும் இணைத்து நிறுத்துகின்ற விரிவுக் கம்பத்தின் (Extension Arms) இடையேயுள்ள தூரமானது 4.30 மீட்டர் குறையாத அகலம் அல்லது 437 மீட்டர் அகலத்திற்கு அதிகமாகாமல் இருந்திட வேண்டும்.