பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா 161 முனையான தட்டைப் பகுதிகள் கரடு முரடாக இல்லாமல், வழவழப்புடன் இருக்க வேண்டும். அந்த முனைப் பகுதிகள் ரப்பர் அல்லது அது போன்ற பிற பொருளால் ஒட்டி மூடப்படாமல், இருக்க வேண்டும். அல்லாமல் அந்தப் பகுதி கரடு முரடாக இருக்கக்கூடாது. அது குறுக்குக் தம்பம் விழுவதைத் தடைசெய்வது போல அமைந்து விடும். 20. குறுக்குக்கம்பத் தாங்கிகள் : (Supports) குறுக்குக் கம்பத்தைக் தாங்குகின்ற வகையில் ஆணிகளை (Pegs) பயன்படுத்திக் கொள்ளலாம். ஆணியில் முடிச்சு எதுவும் இல்லாமல் சீரான ஒரே மாதிரியாக அமைந்திருப்பது போல் இருக்க வேண்டும். அந்த ஆணி அல்லது முனையின் (Peg) விட்டம் 13 மில்லி மீட்டருக்கு மேல் இருக்காதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். அந்த ஆணியானது, உயரக் கம்பத்திலிருந்து உட்புறமாக 75 மில்லி மீட்டர் தூரம் வரை நீண்டிருப்பதுபோல, பொருத்தப்படலாம். அதன் மேல் குறுக்குக் கம்பம் வைக்கப்பட்டிருக்கிற பொழுது தாண்டுகிற போட்டியாளரின் உடலோ அல்லது அவர் உபயோகப்படுத்தும் கோலோ, குறுக்குக் கம்பத்தில் பட்டவுடன் எளிதாகக் கீழே விழுந்து விடுகின்ற தன்மையில் வைக்கப்படுதல் வேண்டும். அந்த ஆணி அல்லது முனைகள்மீது ரப்பர் அல்லது அது போன்ற வேறு பொருட்களை வைத்து ஒட்டியிருக்காதபடியும், முரடான சுர சுரப்புத் தன்மையுள்ளதாக இல்லாதபடியும் பார்த்துக்கொள்ள வேண்டும்.