பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

174

அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்



உதைத்தெழ உதவும் பலகை :

உதைத்தெழ உதவும் அடையாள இடத்தில், பலகை ஒன்று தரையின் சமஅளவில், ஓடிவரும் பாதையின் மைய இடத்தில் பதிக்கப்பட்டிருக்க வேண்டும். ஓடிவரும் தரைக்கு சமமாக இருப்பது போலவே, தாண்டிவிழும் மணற்பரப்பின் உயரத்திற்கு சமமாகவும் அந்தப் பலகையை பதித்திருக்க வேண்டும்.

தாண்டி விழும் மணற்பரப்பின் தொடக்கத்திலிருந்து ஓடிவரும் பாதையில், குறைந்த அளவு 13 மீட்டர் தூரத்தில் அந்தப் பலகையைப் பதித்திருக்க வேண்டும்.

அந்தத் தாண்டி விழும் மணற்பரப்பிற்கு அருகாமையிலிருப்பது போல, பலகையின் முன்புற விளிம்போரத்தில் குறிக்கப்பட்டிருக்கும் கோட்டுக்கு தாண்ட உதவும் கோடு (Take-off line) என்று பெயர்.

அந்தக் கோட்டுக்கு அடுத்து, பிளாஸ்டிசின் என்ற பலகை ஒன்று பதிக்கப்படல் வேண்டும். அந்தப் பிளாஸ்டிசின் பலகையானது. தாண்டும் போட்டியாளரின் காலணியிலுள்ள கூர் ஆணிகள் பட்டால், பதிந்திருக்கும் அடையாளத்தைக் காட்டி விடுவதற்காக அமைக்கப்பட்டிருக்கிறது.

மேற் கூறிய பிளாஸ்டிசின் பலகையைப் பொருத்த இயலாமற் போனால், கீழ்க்காணும் முறையைப் பின்பற்றிக் கொள்ளலாம்.

தாண்ட உதவும் கோட்டை ஒட்டி, 100 மில்லி மீட்டர் அளவில் தாண்ட உதவும் பலகையின் நீளத்திற்கு ஈரமண் அல்லது மணலை 30 டிகிரி அளவில் பரப்பி வைத்து, பிளாஸ்டிசின்னுக்கு மாற்றாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.