பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

176

அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்



16. அளக்கும் முறை : (Measuring) போட்டியாளர்கள் தாண்டி விழுந்த தூரத்தை அளக்க, எந்த இடத்தில் போட்டியாளரது உடலின் ஏதாவது ஓர் உறுப்புத் தொட்டதோ, அந்த இடத்தைத் தெரிந்து கொண்டு, அந்தக் குறிப்பிட்ட இடத்திலிருந்து தாண்டுகின்ற கோடு (Take off line) வரையிலும் உள்ள இடைப்பட்டத் தூரத்தை தான் அளக்க வேண்டும்.

நேராக ஒருவர் தாண்டாமல், ஒரு பக்கக் குறுக்காகத் தாண்டினால், தாண்ட உதவும் கோட்டினைப் பக்கவாட்டில் இழுத்து நீட்டிவிட்டு, அங்கிருந்து தாண்டி விழுந்த இடத்திற்கு நேராகப் பிடித்து அளந்திட வேண்டும்.

அளக்கும் பொழுது, நேர்க்கோட்டின் அளவில் தாண்டுகின்ற கோட்டிலிருந்து நேராக, அளவு நாடாவைப் பிடித்து, இழுத்துப் பிடித்தவாறு அளந்திடவேண்டும்.

17. எந்தத் தாண்டலையும் அளக்கின்ற பொழுது சரியான அளவினை எடுப்பதற்காக, தாண்டி விழும் மணற்பரப்பின் உயரமும், தாண்ட உதவும் பலகையின் உயரமும் சம அளவில் இருப்பது போல, சரி செய்து வைத்துக் கொண்டிருக்க வேண்டும். இதற்காக உதவும் சாதனத்தையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தாண்ட உதவும் பலகை உயரம், மணற்பரப்பின் உயரம், தாண்டிவிழுகிற மணற்பரப்பிற்கு முன்னால் உள்ள ஓடும் பாதையின் உயரம் எல்லாம் எப்பொழுது சம அளவில், ஒரே நோக்கோட்டளவில் இருப்பது போலவே வைத்திருக்க வேண்டும்.