பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

221 அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள் வலைப்பகுதிகளும், இணைக்கப்பட்ட பகுதிகளும் சங்கிலிக் குண்டை வெளியே செல்லாதவாறு தடுத்து நிறுத்தும் வலிமையுடையதாக இருக்க வேண்டும் என்பது தான் முக்கியம். 5. வலைக் கூண்டில் பின்னப்படுவதற்காக சின்தடிக் பைபர் கார்டு (செயற்கையான நூல் கயிறு) அல்லது அதற்கு மாற்றாக, நல்ல எதிர்த்துத் தள்ளும் ஆற்றல் மிக்க எ.குக் கம்பிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அப்படிப் பின்னப் பயன்படும் கம்பியின் அளவு 44 மில்லி மீட்டரும், கயிறானது 50 மில்லி மீட்டர் அளவும் இருக்க வேண்டும். கயிறோ அல்லது கம்பியோ எதுவாக இருந்தாலும், அது ஆக்கப் படுகிற வலையின் அமைப் பைப் பொருத்ததாகும். இருந்த போதிலும் அந்த வலையின் சக்தி குறைந்தது 130 கிலோ கிராம். அளவுடையதாக இருந்தால். தாங்கிக் கொள்ளக் கூடிய சக்தியையும், அறுந்து போகாத வலிமையையும் கொண்டதாக இருக்கும். எ.குக் கம்பியால் ஆன வலைக் கூண்டு என்றால், அதை ஒவ்வொரு 12 மாதத்திற்குள்ளாக சோதித்து சரிபார்த்துக் கொண்டாக வேண்டும். வெறுமனே பார்வையால் பரிசோதித்துப் பார்த்து விடுவது, அந்த சிந்தடிக் கயிற்று வலைக் கூண்டுக்கு ஃாத விஷயமாகும். ஆங்காங்கே, பல கயிற்றுத் *டுகளை இணைத்து, தயாரிப்பாளர்கள் வலையைத் 2யாரித்திருப்பதால், ஒவ்வொரு 12 மாதத்திற்குள்ளாக,