பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா - 226 போட்டியாளர் செய்து கொண்டு வந்திருக்கிறார் என்றால், அதனை அதிகாரிகள் அனுமதிக்கக்கூடாது. எந்தக் காரியம் செய்தாலும், அது வேலினை எறிவதற்காக உதவிகரமாக இருக்கும் என்றால், அதனை அனுமதிக்கவே கூடாது. கையில் காயம் ஏதேனும் இருந்தால் அதனை வெளிப்புறத்திற்குள் காட்டாமல் இருப்பதற்காகக் கட்டுப்போட்டிருந்தால் அதை அனுமதிக்கலாம். முதுகெலும்புத் தண்டுக்கு காயம் அல்லது ஏதேனும் அபாயம் நேராமல் காப்பாற்றிக்கொள்ள, தோலால் ஆன பெல்ட் அல்லது அதற்கிணையான ஏதாவது ஒன்றை அணிந்து கொள்ள அனுமதி உண்டு. - வேலினை நன்கு உறுதியாகப் பற்றிப்பிடித்துக் கொண்டு எறிய, போட்டியாளர்கள் தங்கள் கைகளில் பொருத்தமான, பொருளினைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி உண்டு. கைகளில் கையுறைகள் அணிந்து கொள்ள அனுமதி இல்லை. சரியான எறிக்குறிய விதிமுறைகள்: 5. (அ) வேலில் உள்ள பிடிப்பிடத்திலிருந்து (Grip) பிடித்திருந்து தான் எறிய வேண்டும். வேலினை தோள் புறத்திற்கு மேற்புறத்திலிருந்து அல்லது எறியும் நேரத்தில் எறிய உதவும் முன்கை, தோள்புறத்திற்கு மேலே வந்து தான் எறிய வேண்டும். வேலை எறியும்போது நேரே செல்வது அல்லது பாய்வது போல் தான் இருக்க வேண்டுமே யன்றி, சுழன்று போகும் தன்மையில் எறியக்கூடாது.